»   »  தலக்கு வந்த கோபம் தளபதிக்கு ஏன் வரவில்லை?

தலக்கு வந்த கோபம் தளபதிக்கு ஏன் வரவில்லை?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்துக்கு வேணாம் - விஜய்க்கு வேணும் : அது என்ன?- வீடியோ

சென்னை: இன்று வெளியான தகவலை கேட்டு பலரும் கேட்கும் கேள்வி இது தான்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்புகள் நடக்காமல் முடங்கிப்போயுள்ளது.

தல, தளபதி என்று பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

தல படத்தின் படப்பிடிப்பு சினிமா ஸ்டிரைக்கால் தள்ளிப் போயுள்ளது. இந்த காரணத்தால் திட்டமிட்டபடி படத்தை பண்டிகையின்போது வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அனுமதி

அனுமதி

தல படத்தின் படப்பிடிப்பை நடத்த சிறப்பு அனுமதி கேட்க தயாரிப்பாளர் முடிவு செய்தது குறித்து அறிந்த நடிகர் கோபப்பட்டுள்ளார். ஸ்டிரைக் நடக்கும்போது நமக்கு மட்டும் எதற்கு சிறப்பு அனுமதி அதெல்லாம் தேவை இல்லை, நாம் மட்டும் சுயநலமாக செயல்படக் கூடாது என்று எகிறியுள்ளார் தல.

அனுமதி

அனுமதி

தல தயாரிப்பாளரிடம் எகிறியது குறித்து அறிந்து அனைவரும் அவரை பாராட்டினார்கள். இந்நிலையில் தளபதி படத்தின் படப்பிடிப்பை நடத்த சிறப்பு அனுமதி கோரியுள்ளனர்.

கோபம்

கோபம்

சிறப்பு அனுமதி கேட்பது குறித்து தலக்கு வந்த கோபம் தளபதிக்கு ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. எத்தனையோ படங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தன் படத்திற்கு சிறப்பு அனுமதி கோருவது சரியா என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

English summary
Thala actor told his producer not to ask special permission for his film shoot. In the mean while, thalapathy film unit has applied for special permission to go ahead with shooting amidst the strike.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X