அடுத்த படத்துக்கும் வேட்டு வைத்த இயக்குநர்.. தயாரிப்பாளருடன் சண்டை போட்டதால் தள்ளிப்போன ரிலீஸ்!

By Staff

சென்னை: ஏற்கனவே அந்த கெட்டப் நடிகர் நடிக்கும் படங்கள் வெளியாகாமல் சிக்கலில் தவித்து வரும் நிலையில், அவரது அடுத்த படத்திற்கு வேட்டு வைத்துள்ளார் அந்த பிரபல இயக்குநர்.

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் அந்த இயக்குநரை நம்பி புதிய படங்கள் குவிந்த வண்ணமே உள்ளன.

அப்பாவையும் மகனையும் வைத்து அவர் இயக்கி உள்ள புதிய படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எப்போ ரிலீஸ் ஆகும் என்றே தெரியாத நிலை உருவாகி உள்ளதாம்.

வெறும் பில்டப்

வெறும் பில்டப்

திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் வெறும் பில்டப்பை மட்டுமே நம்பி படங்களை இயக்கி வருகிறார் அந்த இயக்குநர் என அவரது படங்கள் தொடர் தோல்வியடைய பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒல்லி நடிகரை வைத்து அவர் கடைசியாக இயக்கிய படமும் கடும் சிக்கலுக்கு பிறகே ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

இந்த ஆண்டாவது கெட்டப் நடிகரின் செம மாஸ் படத்தை பார்த்து விடலாம் என மிகவும் ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களின் கனவு குளத்தில் மிகப்பெரிய கல்லை போட்டு அப்செட்டாக்கி உள்ளார் அந்த இயக்குநர். இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த அந்த படத்தின் ரிலீசுக்கே தற்போது வேட்டு வைத்து விட்டாராம்.

தயாரிப்பாளருடன் சண்டை

தயாரிப்பாளருடன் சண்டை

பல கோடி கொட்டி படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடமே தொடர்ந்து இயக்குநர்கள் மோதல் போக்கை கடைபிடிப்பதை டிரெண்டாக்கி வருகின்றனர். படத்திற்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்க சிலர் இதுபோல செய்த நிலையில், அந்த இளம் இயக்குநரும் தற்போது பட தயாரிப்பாளருடன் சண்டை போட படத்தின் ரிலீஸ் கேள்விக்குள்ளாகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே இரண்டு படங்கள்

ஏற்கனவே இரண்டு படங்கள்

கெட்டப் நடிகர் நடிப்பில் ஏற்கனவே உருவான இரண்டு படங்கள் இதே போல தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ள நிலையில், அந்த லிஸ்ட்டில் இந்த படமும் சேர்ந்து கெட்டப் நடிகருக்கு ரிலீஸ் ஆகாமல் ஹாட்ரிக் அடித்த படமாக இந்த படம் மாறிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.

அதுமட்டும் தான் நம்பிக்கை

அதுமட்டும் தான் நம்பிக்கை

எத்தனை படங்கள் ரிலீசாகமல் கை விரித்தாலும் அந்த பிரம்மாண்ட வரலாற்று படம் சொன்ன தேதியில் வெளியாகி கெட்டப் நடிகரை கெத்தாக மீண்டும் கோலிவுட்டில் வலம் வர செய்யும் என்கிற நம்பிக்கை மட்டுமே இப்போதைக்கு மிச்சம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X