ஓஹோ அவர்தான் ரகசிய சிநேகிதரா?.. நடிகைக்காக திடீரென வரிந்துக் கட்டும் இயக்குநர்.. செம டீலிங் போல!
சென்னை: தன்னுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரத்திற்கு ஒத்துவராத நடிகையை ஒதுக்கி வைத்து விட்டு எல்லை மீறிய உறவில் ஈடுபட்டு வரும் நடிகைக்கே அடுத்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பை தூக்கி கொடுத்துவிட்டார் இயக்குநர் என பக்கத்து ஸ்டேட்டில் பலான பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. இதனால், பெரிய தலைவலியே தற்போது ஹீரோவுக்குத்தான் என கிசுகிசுக்கின்றனர்.
ஹீரோயின்களுடன் இயக்குநர்கள் காதலில் விழுவதை எல்லாம் தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்திருக்கிறோம். மற்ற மொழிகளிலும் இது இயல்பாகவே நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். டிவி தொடர்களில் கூட வாய்ப்புக் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நடிகைக்கு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பை இயக்குநர் தூக்கி கொடுக்க காரணமே அந்த மேட்டர் தான் என்கின்றனர்.
இயக்குநர் மற்றும் நடிகை ரகசிய உறவில் ஈடுபட்டு வந்ததை அறிந்து முந்தைய படத்தின் நடிகையே ரொம்பவே அப்செட் ஆன கதைகள் கூட அப்போது வெளியான நிலையில், தொடர்ந்து இயக்குநர் தன்னுடைய சுய லாபத்திற்காக பெரிய நடிகரின் படத்தில் பல்லாங்குழி விளையாண்டு வருகிறார் என்கின்றனர்.

முகத்திரையை கிழித்த ஹீரோயின்: ஆணாதிக்க சிந்தனைகளை அதிகம் கொண்ட அந்த இயக்குநர் எப்போதும் நடிகைகளை போக பொருளாக மட்டுமே தனது படங்களில் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. ஆனால், அதையெல்லாம் தாண்டி இயக்குநர் கொடுக்கும் வெற்றி தான் பரவலாக பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வந்தது. அடுத்த படத்தில் நடிக்க திருமணமான நடிகைக்கு ஏகப்பட்ட டார்ச்சர்களை மறைமுகமாக இயக்குநர் கொடுக்க ஆரம்பித்த நிலையில், அவர் நைஸாக நழுவிக் கொண்டார் என்றும் மேலும், இயக்குநரின் முகத்திரையை கிழிக்கும் வேலைகளில் அவர் ஈடுபட்டது தான் தற்போது இயக்குநரை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாக கூறுகின்றனர்.
இயக்குநருக்கு வந்த கோபம்: தன்னுடைய ரகசிய சிநேகிதி பற்றிய தகவல்களை சினிமா வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் நடிகை தன்னுடைய டீம் மூலமாக அம்பலப்படுத்த ஆரம்பித்து விட்ட நிலையில், நள்ளிரவில் குடி போதையில் கடுப்பான இயக்குநர் நடிகையுடன் போனிலேயே சண்டை போட முடிவெடுத்து முயற்சி செய்தாராம். ஆனால், நடிகை அந்த இயக்குநரின் நம்பர் என்று தெரிந்ததும் கொஞ்சம் கூட மதிக்காமல் எடுக்கவே இல்லாத நிலையில் தான் இயக்குநருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது என்கின்றனர்.
நடிகருக்கு தலைவலி: நடிகைக்கும் இயக்குநருக்கும் இடையே வெடித்துள்ள மோதல் காரணமாக பெரிய தலைவலியில் சிக்கியிருப்பதே அந்த பிரமாண்ட நடிகர் தான் என்கின்றனர். நடிகையுடன் அடுத்தும் ஒரு படத்தில் அவர் நடிக்க வேண்டிய நிலையில், இயக்குநருடன் நட்புறவு பாராட்டினால், நடிகை கோபித்துக் கொள்வார் என்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் யோசித்து வருகிறாராம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரும் நடிகையும் சேர்ந்துக் கொண்டு தன்னுடைய நேரத்தை வீணடித்து விட்டால் என்ன செய்வது என்கிற பயமும் நடிகருக்கு அதிகம் எழுந்துள்ளதாக கூறுகின்றனர்.
வெளியேற வாய்ப்பு: இதுவரை இயக்குநர் தன்னுடைய கண்டிஷன்களுக்கு எல்லாம் சம்மதம் சொல்லித்தான் பணியாற்றி வருகிறார் என்பதால் நடிகரால் திடீரென எந்தவொரு முடிவையும் எடுக்க முடியவில்லை என்கின்றனர். தன்னிடம் ஏதாவது ராங் காட்டினால் படத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறிவிடலாம் என்கிற முடிவையும் நடிகர் எடுத்திருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. அந்த யங் ஹீரோயினால் தற்போது இயக்குநரின் குடும்பத்திலும் குண்டு வெடித்திருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











