கதை கேட்கவே நேரமில்லன்னா... எப்படி முழு படத்திலும் நடிப்ப? நடிகரை வெளுத்த இயக்குநர்!

Recommended Video

நடிகரை வெளுத்த இயக்குநர்!- வீடியோ

அதிகக் காரமுள்ள ரேடியோவிலிருந்து நடிக்கவந்தவர் அந்த நடிகர். கடைசிவரை நடிக்கவில்லை என்பது தனிக்கதை! அவரது பாடி லங்குவேஜ் மற்றும் டயலாக்குகளால் அவருக்கும் அவ்வப்போது வண்டி ஓடுகிறது என்பதே உண்மை.

சமீபத்தில் ஒரு இயக்குநர் கதை சொல்லப்போயிருக்கிறார். வரவேற்பேல்லாம் பிரமாதமாக இருந்திருக்கிறது. "பாஸ்...எவ்வளவு நேரத்தில் கதை சொல்லுவீங்க?" என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டிருக்கிறார். கதை சொல்லப்போன இயக்குநருக்கு அதிர்ச்சி. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி கேட்டிருக்கிறார். "நீங்க ஒரு படம் பார்த்திட்டு வந்து, அந்தக்கதையை உங்க ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொன்னீங்கன்னா...எவ்வளவு நேரத்தில சொல்வீங்க?" நடிகர் இதை எதிர் பார்க்கவில்லை!

Director blasted comedy hero

"ஒரு பத்து நிமிசத்தில சொல்லிருவேன்," என்று எதிர்வினை புரியாமல் சொல்லியிருக்கிறார் நடிகர். கதை சொல்லப்போன இயக்குநர் ஏற்கனவே மூன்று படங்கள் இயக்கியவர். இரண்டு படம் செம ஹிட். காமெடிச் சேனல்களில் அந்தப் படங்களின் காமெடி இடம் பெறாமல் ஒருநாளும் இருந்ததில்லை. இயல்பாகவே கலகலப்பாக பேசக்கூடியவர் அந்த இயக்குநர்.

கதை கேட்க உட்காருவதற்கு முன்பு நடிகர் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். "கைவசம் அஞ்சு படம் இருக்கு. அதையும் சொல்லிர்றேன் பாஸ்."

இது எல்லத்திற்குமாக சேர்த்து வச்சு அந்த நடிகருக்கு கிளாஸ் எடுத்திருக்கிறார் அந்த இயக்குநர். "சார், நான் உங்ககிட்ட கதை சொல்லத்தான் வந்தேன். உங்களுக்கு மேனேஜர் வேலை பார்க்க இல்ல. நீங்க எத்தனை படம் நடிச்சா எனக்கென்ன! நானா உங்களுக்கு கால்ஷீட் பார்க்கப் போறேன். ஒரு கதையை முழுசா கேட்க மாட்டிங்கன்னா, ஷூட்டிங் ஸ்பாட்ல எப்படி உங்களால இன்வால்வ்மெண்ட்டோட நடிக்க முடியும்!? நான் கதை சொன்னாலும் நீங்க நடிக்கப் போறதில்லை... எதுக்கு ரெண்டு பேர் டயத்தையும் வேஸ்ட் பண்ணிக்கிட்டு? என்று சிரித்தபடி சொல்லிவிட்டுக் கடைசியாகச் சொன்னதுதான் ஹைலைட்! "சார், நீங்க நடிக்கிறது அப்பறம்... மொதல்ல 'கதை'கேட்டு பழகுங்க!"

ஆனாலும் இப்பவும் கதை சொல்லப்போகிற இயக்குநர்களிடம், "பாஸ்,எவ்வளவு நேரத்துல கதை சொல்வீங்க" என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கிறதாம்.

வெளங்கிரும் வெள்ளாமை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X