»   »  வாங்கிக் கொடுத்த ஃபைனான்ஸில் வேறு படம் எடுக்கும் இயக்குநர்... தவிக்கும் நடிகர்!

வாங்கிக் கொடுத்த ஃபைனான்ஸில் வேறு படம் எடுக்கும் இயக்குநர்... தவிக்கும் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்டைலிஷ் டிரேக்டருக்கும் வாரிசு நடிகருக்கும் லடாய்- வீடியோ

வாரிசு நடிகரை ஹீரோவாக்குவதற்காக வாங்கிய ஃபைனான்ஸை, தான் இயக்கும் வேறு படங்களுக்கு செலவு செய்கிறாராம் அந்த ஸ்டைலிஷ் இயக்குநர். வெளியில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார் வாரிசு நடிகர்.

பிரேக் கிடைக்காமல் அல்லாடிய வாரிசு நடிகரை தல நடிகருக்கு வில்லனாக்கினார் ஸ்டைலிஷ் இயக்குநர். அந்த படத்துக்கு பின்னான பத்திரிகையாளர் சந்திப்பில் வாரிசு நடிகரை ஹீரோவாக்கி ஒரு படம் இயக்குவேன் என்று சொல்லியிருந்தார். இயக்குநர் அதன்பிறகு இரண்டு மூன்று புராஜக்ட்களில் ஒரே நேரத்தில் கால் வைத்து மாட்டிகொண்டார். வாரிசு நடிகருடன் 'நாம் இணையலாம் தயாரிப்பாளருக்கு ஏற்பாடு செய்' என்று சொல்ல நடிகரும் ஒரு வெயிட் தயாரிப்பாளரை இறக்கியுள்ளார்.

Director cheats son actor

அந்த தயாரிப்பாளரிடம் இருந்து பல்க் அமவுண்டை வாங்கிய இயக்குநர், தான் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படங்களுக்கு செலவு செய்து வருகிறாராம். வாரிசை இயக்கும் படத்தை இப்போதைக்கு ஆரம்பிக்கிறாற்போல் தெரியவில்லை.

இந்த கொடுமையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறாராம் வாரிசு.

Read more about: gossip கிசுகிசு
English summary
That stylish Director is cheating the son actor by failed to keep his promise

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil