நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுவுற மாதிரி அழுவுறேன்: இயக்குனர், விமர்சகரின் பலே ஐடியா
Recommended Video

சென்னை: நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுவது போன்று அழுகிறேன் என்று தான் அந்த இயக்குனர், விமர்சகரின் வீடியோவை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
பெரிய இடத்தை சேர்ந்த இயக்குனர் எடுத்த படத்தை ஒருவர் விமர்சித்து வீடியோ வெளியிட்டார். அந்த விமர்சனத்தை ஏற்காத இயக்குனர் அவரை விவாதத்திற்கு அழைத்தார். விமர்சகர் மறுக்க இயக்குனர் வீடியோ ஒன்றை அவருக்கு அனுப்பி வைக்க அவரும் அதை வெளியிட்டார்.
அந்த வீடியோ கண்டமேனிக்கு வைரலாகிவிட்டது.

வீடியோ
யூடியூபில் இந்தியா அளவில் சர்ச்சை நடிகையின் கோகோ பட பாடல் முதல் இடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தை பிடித்தது அந்த இயக்குனர் விமர்சகரை கலாய்த்து வெளியிட்ட வீடியோ தான்.

இயக்குனர்
இயக்குனர் தன் படத்திற்கு விளம்பரம் தேடவே இப்படி அந்த விமர்சகரை கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. வீடியோ வைரலாகி படத்திற்கும் விளம்பரம் கிடைத்துவிட்டது.

நல்லா இருக்கு
படத்திற்கு விளம்பரம் தேட படக்குழு வித்தியாசமாக யோசிக்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் இயக்குனரின் வீடியோவை பார்த்தவர்கள் அடடா இந்த ஐடியா நமக்கு தோன்றவில்லையே என்று ஃபீல் பண்ணுகிறார்கள்.

விளம்பரம்
அந்த வீடியோ வைரலானதால் விமர்சகருக்கும், இயக்குனருக்கும் நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. பேசி வைத்து செய்தது போல் இருக்கிறதே. நல்லா தேடுறாங்கய்யா பப்ளிசிட்டிய.


Click it and Unblock the Notifications











