பெரிய குடும்பத்தில் விரிசல்.. இயக்குநர் பண்ண வேலையால் கடுப்பான பிரைட் நடிகர்.. ரொம்ப கஷ்டம் தான்!

By Staff

சென்னை: தன்னையும் தனது குடும்பத்தினரையும் குற்றவாளியாக்கிய அந்த இயக்குநருடன் சகவாசமே வைக்கக் கூடாது என பல வருடங்களாக பிடிவாதமாக இருந்து வரும் பிரைட் நடிகர் தற்போது இயக்குநரின் பிடிவாதத்தால் கடுப்பாகி உள்ளதாக கூறுகின்றனர்.

இயக்குநர் சொல்பேச்சைக் கேட்டு அந்த இயக்குநருடன் இணைந்து நடித்தால் கண்டிப்பாக பிரதர்ஸ் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பெரிய குடும்பத்தில் பெரிய விரிசல் விழுந்து விடும் என்றும் திடுக்கிட வைக்கின்றனர்.

Director decision makes argument between big actor family?

எல்லாத்துக்கும் காரணம் அந்த தயாரிப்பாளரின் சுயநலம் தான் என்றும் மறக்கப்பட்ட பிரச்சனையை மீண்டும் கிளறிவிட்டது அவர் தான் என்றும் கூறுகின்றனர்.

பெரிய குடும்பம்: அப்பா நடிகர் தன்னை விட தனது மகன்கள் சினிமாவில் சிறந்து விளங்க வேண்டும் என கடும் உழைப்பு போட்டு இரு மகன்களையும் சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகப்படுத்தினார். ஒன்றாக ஒரே குடும்பமாக இருந்து வந்த நிலையில், மூத்த மருமகள் மீண்டும் நடிக்க கிளம்பியது பிரச்சனையை கிளப்ப மூத்த மகன் தனிக் குடித்தனத்துக்கு மாமியார் ஊருக்கே சென்று விட்டது அப்பா நடிகரை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளதாக கூறுகின்றனர்.

பழைய பகை: பல வருடங்களாக கங்காக எரிந்துக் கொண்டிருந்த பகை தற்போது எரிமலையாக வெடித்து சிதறி விட்டது. ஆனால், சினிமாவில் பெரிய குடும்பத்துக்கு ஒருத்தர் கூட சப்போர்ட்டுக்கு வராமல் பாதிக்கப்பட்ட இயக்குநர் பக்கம் பலரும் வந்து நிற்க ஆரம்பித்து இருப்பது மேலும், அந்த குடும்பத்தினரை அசிங்கப்படுத்தி உள்ளது.

இயக்குநர் திட்ட வட்டம்: இரு தரப்புக்கும் இடையே பகை முற்றியுள்ள நிலையில், அந்த இயக்குநரோ என் படத்துல அந்த இயக்குநர் நடிச்சாத்தான் படமே பண்ணுவேன் என ஒத்தைக் காலில் நிற்கிறார். கதையும் நல்ல கதை என்பதால் பிரைட் நடிகரும் சினிமாவுக்குள் எதற்கு பர்சனல் பகை என நடிக்க சம்மதித்து விட்டாராம்.

சகோதரர்களுக்குள் சண்டை: ஆனால், அந்த இயக்குநருடன் அண்ணன் சேர்ந்து நடிக்கக் கூடாது என அப்பாவிடம் தொடர்ந்து பிரதர் நடிகர் கண்டிப்பாக சொல்லி வருகிறாராம். அதையும் மீறி இணைந்து நடித்தால் இருவருக்குள்ளும் சண்டை வெடிக்கும் என்றும் பல படங்களின் பிளான் கெட்டுப் போகும் என்பதால் தான் அண்ணன் நடிகர் அந்த படத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே பிரச்சனையை சரி செய்ய போராடி வருகிறார் என கிசுகிசு பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X