போதையில் ஷூட்டிங் வந்த நடிகை.. தூக்கி கடாசிய இயக்குநர்.. பாலியல் தொல்லைனு பிளேட்டை திருப்பிட்டாங்களாம்
சென்னை: முழு போதையில் ஷூட்டிங் வந்ததன் காரணமாக படத்திலிருந்து நடிகையை இயக்குநர் தூக்கியதாகவும் ஆனால் பாலியல் தொல்லை என நடிகை பிளேட்டை திருப்பிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை ஹீரோயினாகவும் பல வருடங்களுக்கு பிறகு அறிமுகமானார். முதல் படத்தில் அவரது நடிப்புக்கும் அழகுக்கும் வரவேற்பு கிடைத்ததன் காரணமாக பக்கத்து மாநில திரையுலகில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. அதன் காரணமாக ஒரே வருடத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்து கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழில் அறிமுகம்: தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவர் தமிழில் சூடான படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் பாடல்கள் ஹிட்டாகி நடிகையை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்தது. அதன் பிறகு தமிழிலும் அவருக்கான கதவுகள் திறக்கப்பட்டன. அப்படி அவர் பறவை பெயர் கொண்ட படத்தில் நடித்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று நல்ல நடிகை என்ற பெயரையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது.
தொடர் வாய்ப்புகள்: நல்ல நடிகை என்று பெயர் எடுத்ததால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது டாப் ஹீரோவாக இருக்கும் ஒருவரின் ஆரம்பகால கரியரின் ஒரு படத்தில் நடித்து மேலும் புகழடைந்தார். அதுமட்டுமின்றி தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்தார் நடிகை.
குறைந்த வாய்ப்புகள்: திறமையும், அழகும் சேர்ந்த நடிகை என்ற பெயர் பெற்றதன் காரணமாக கண்டிப்பாக கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதன் பிறகு சின்னத்திரையில் ஃபேமஸாக இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
என்ன காரணம்?: அப்படி நடிகைக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததற்கு காரணம் அவரேதானாம். அதாவது பொழுதுபோக்கிறாக அவர் ஆரம்பித்த குடி பழக்கம் அவரது பிழைப்பையே கெடுத்துவிட்டதாம். தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்தவர் ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகி ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வராததும்; வந்தாலும் குடித்துவிட்டு வருவதுமாக இருந்தாராம்.
பிளேட்டை திருப்பிய நடிகை: அப்படித்தான் ஒரு படத்திலும் நடந்ததாம். அதாவது தேசிய விருது வென்ற படத்தை இயக்கிய இயக்குநர் கிரிக்கெட் வீரரை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. அப்படத்தில் முத்லில் இந்த நடிகையைத்தான் கமிட் செய்தாராம் இயக்குநர். ஆனால் நடிகையோ சதா குடித்துவிட்டு ஷூட்டிங்கிற்கு வந்தாராம்.
ஆரம்பத்தில் பக்குவமாக சொல்லிப்பார்த்த இயக்குநர் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து திட்டி; இனி நீங்கள் இந்தப் படத்தில் இல்லை என்று நீக்கிவிட்டு காதலில் விழுந்த ஹீரோயினை புக் செய்துவிட்டாராம். இதனை அவமானமாக கருதிய நடிகை இயக்குநரை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என எண்ணி; ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என அப்போது கொளுத்தி போட அது பற்றி எரிந்ததாம்.
அந்த விவகாரம் மீண்டும் இப்போது பூதாகரம் ஆகியிருக்கிறது. முக்கியமாக இயக்குநர் மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டோடு இந்த விஷயத்தையும் சேர்த்து பேச ஆரம்பித்திருக்கிறார்களாம். ஆனால் உண்மையில் இயக்குநர் அந்த நடிகைக்கு பாலியல் தொல்லை எல்லாம் கொடுக்கவில்லை குடித்துவிட்டு ஷூட்டிங் வரக்கூடாது என்றுதான் சொன்னார் என்கின்றனர் திரைத்துறையில் விவரமறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











