இது வேலைக்காகாது.. படமா எடுக்குறாய்ங்க.. ஓட்டம் பிடித்த இயக்குநர்.. எல்லாம் ஏன் தெரியுமா?

சென்னை: தான் இயக்கும் படங்கள் தொடர்ந்து, ஒரு நாள் கூட தியேட்டரில் ஓடாமல் மண்ணைக் கவ்வி வருவதால், தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நடிப்புத் திறமையை வைத்து சாப்பாட்டுக்கு வழி செய்து வருகிறார் அந்த இயக்குநர்.

இந்நிலையில், அந்த இயக்குநர் குறித்த அடடே தகவல் ஒன்று கோடம்பாக்கம் கோடாங்கி காதுகளுக்கு எட்டி உள்ளது.

அது என்னவென்றால், இந்த வாரம் ரிலீசான ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான அந்த இயக்குநர், ஒரே நாளில் ஷூட்டிங்கை விட்டு ஓடி வந்துவிட்டாராம்.

டைட்டிலில் மட்டும்

டைட்டிலில் மட்டும்

தலைப்பில் மட்டும் அழகான தமிழ் பெயர்களை வைத்து விட்டு, படத்தின் வசனங்களில் ஆங்கிலம் மற்றும் ஆபாசம் கலந்து எழுதும் அந்த இயக்குநரின் ஆரம்ப கால படங்கள், நல்ல வெற்றியை அவருக்குத் திரட்டித் தந்தன. ஆனால், ஒரே டெம்பிளேட் படங்கள் எடுத்தால், ரிஜெக்ட் பண்ணும் கோலிவுட் ரசிகர்களின் பல்ஸ் தெரியாமல், இப்போ சிக்கலில் தவித்து வருகிறார்.

கடனுக்கு

கடனுக்கு

அந்த மலையாள இயக்குநரின் கடைசி படம் ரிலீஸ் ஆக முடியாமல் சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நிலையில், வெற்றி தயாரிப்பாளர் அந்த இயக்குநருக்கு ஒரு கண்டிஷன் பேரில் உதவி செய்தார். அந்த நன்றிக் கடனுக்காக தற்போது, அந்த தயாரிப்பு நிறுவனத்தின் சொந்தக்கார பையனை ஆக்‌ஷன் ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்கி வருகிறார் அந்த இயக்குநர்.

ரொம்ப பாவம்

ரொம்ப பாவம்

ஏற்கனவே அந்த சொந்தக்கார நடிகர் நடிப்பில் வந்த எந்தவொரு படங்களும் ஓடாத நிலையில், நன்றிக்கடனுக்காக அந்த மலையாள இயக்குநர் இயக்கும் அடுத்த படமும் ஓடுவது கஷ்டம் தான் என கோலிவுட் வட்டாரத்தில், அவர் காதுபடுவே பலரும் பேசி வருகின்றனர். என்ன பண்றது, இஷ்டத்துக்கு அகல கால் வைத்த பலனை இப்போ அனுபவித்து வருகிறார்.

கெஞ்சல்

கெஞ்சல்

அந்த பிரைட் நடிகருக்கு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் என்கிற உரிமையில், தற்போது, சார் சார் ஒரே ஒரு படத்துக்கு சான்ஸ் கொடுங்க என்று கெஞ்சி வருகிறார் அந்த மலையாள இயக்குநர். ஆனால், அந்த பிரைட் நடிகரோ, ஏற்கனவே கொடுத்த பிளாப் எல்லாம் போதும்பா என தற்போது ரொம்ப உஷாராகி தப்பித்து வருகிறார்.

பிழைப்பை ஓட்ட

பிழைப்பை ஓட்ட

தான் இயக்கும் படங்கள் எல்லாம் தொடர்ந்து மண்ணைக் கவ்வி வரும் நிலையில், தற்போது, தனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச நடிப்பை வைத்து, தன்னைப் பார்த்து இன்ஸ்பயர் ஆன அறிமுக இயக்குநர்கள் படங்களில் ஸ்பெஷல் ரோலில் நடித்து வருகிறார் அந்த இயக்குநர். எப்படி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டீங்களே என சமீபத்தில் ஹிட் அடித்த ஒரு படத்தை பார்த்த பலரும் புலம்பி வருகின்றனர்.

எஸ்கேப்

எஸ்கேப்

இந்நிலையில், இந்த வாரம் ரிலீசான அந்த வாரிசு நடிகரின் காக்கி சட்டை படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை விட்டுவிட்டு ஒரே நாளில், ஷூட்டிங்கை விட்டு ஒரே ஓட்டமாக ஓடி வந்துள்ளார் அந்த மலையாள இயக்குநர் என்ற பேச்சு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சரியான முடிவு

சரியான முடிவு

இந்த வாரம் வெளியாகி உள்ள அந்த காக்கி சட்டை படத்தில், அந்த கேமராமேன் நடித்த ரோலில் தான் முதலில் இந்த இயக்குநருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், இயக்குநரின் மேக்கிங்கை பார்த்து கடுப்பான அந்த மலையாள இயக்குநர், இதெல்லாம் வேலைக்காவாது என சரியான முடிவைத்தான் எடுத்து வெளியேறியுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X