மீண்டும் அந்த நடிகரிடம் அசிங்கப்பட்ட சுமார் மூஞ்சி குமாரு
சென்னை: பப்ளிசிட்டி தேடாத நடிகரை இயக்க மீண்டும் முயற்சி செய்து தோற்றுள்ளார் சுமார் மூஞ்சி குமாரு.
சுமார் மூஞ்சி குமாரு கோலிவுட்டில் உள்ள ஹீரோக்களில் இரண்டு பேர் மீது மட்டும் தான் கண் வைத்துள்ளார். படம் எடுத்தால் அந்த இரண்டு பேரை மட்டும் வைத்து தான் எடுப்பேன் என்று அடம்பிடிக்கிறார்.
பப்ளிசிட்டி தேடாத நடிகரை இயக்க பெருமுயற்சி செய்து தோற்றார். இதையடுத்து அந்த அமைதியான நடிகரை வைத்து படம் எடுத்து வெற்றியும் கண்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் பப்ளிசிட்டி தேடாத நடிகரை இயக்க காய் நகர்த்தி தோல்வி அடைந்துள்ளார் இயக்குனர். இவர் என்ன தான் தலைகீழாக நின்று அடம்பிடித்தாலும் அந்த நடிகர் இவரை கண்டுகொள்வதாகவே இல்லை.
எனக்கும் நேரம் வரும் அவரை இயக்காமல் விட மாட்டேன் என்று நம்பிக்கையோடு உள்ளார் சுமார் மூஞ்சி குமாரு.
Comments


Click it and Unblock the Notifications