சொந்த காசுலயே சூனியம்.. டைரக்டருக்கு செம டோஸ் விட்ட முதலாளி.. ஒட்டுமொத்த சோலியும் முடிஞ்சுப்போச்சா?

By Staff

சென்னை: என்ன நம்புங்க உங்க சைடுக்கு சூப்பரான ஒரு சம்பவத்தை பண்றேன் என அந்த பிரபல டைரக்டர் பெரிய சம்பவமாக பண்ணிவிட்ட நிலையில், முதலாளிக்கு நாலாப்பக்கமும் ஆப்பு அடிக்கப்பட்டு விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சொந்த காசுலயே சூனியம் வச்சிக்கிறது இதுதான் என பெரும் புள்ளி பட முதலாளியை பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய நிலையில், அவர் அந்த கோபத்தை ஒட்டுமொத்தமாக அந்த டைரக்டர் மீது இறக்கி விட்டாராம். அதன் எதிரொலியாகவே முதலாளிக்கு விசுவாசமாக பிரச்னையை திசை திருப்ப வேண்டும் என டைரக்டர் பார்த்த வேலையால், மறுபடியும் அவரே மாட்டிக் கொண்டு முழிக்கிறார் என்கின்றனர்.

Director getting bashed by her owners who invest more money and plans

சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்கள் தொடர்ந்து அரை டஜன் படங்கள் ஃப்ளாப் கொடுத்தாலும், ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால் கம்பேக் ஆகிவிடலாம். ஆனால், இயக்குநர்களின் நிலைமையே வேறு ஃப்ளாப் கொடுத்து விட்டால் அவர்களை இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுக்கி விடுவார்கள்.

அடி மேல் அடி வாங்கும் டைரக்டர்: பல தடைகளை கடந்து அந்த டைரக்டர் டாப் நடிகர்களை இயக்க முடிவு செய்தால், அவர்கள் யாருமே அவருடன் வேலை பார்க்க விருப்பமில்லாமல் கம்பியை நீட்ட, கிடைத்த நடிகர்களை வைத்து கிண்டிய குருமா சரியாக வேகாத நிலையில், அவசர கதியில் வேற விஷயத்துக்கு தேவைப்பட்ட நிலையில், முந்திரிக்கொட்டை போல வந்து கடைசியில், டைரக்டருக்குத்தான் நாலாப்பக்கமும் அடி விழுந்து விட்டது என கோடம்பாக்கத்தில் பல கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Director getting bashed by her owners who invest more money and plans

அதிக செலவு: பெரிய நடிகர்கள் எஸ்கேப் ஆன நிலையில், அடுத்தக்கட்ட நடிகர்களை வைத்து அளவான பட்ஜெட்டில் படம் எடுக்காமல் பெரிய பட்ஜெட்டில் அகல கால் வைத்தது தான் இயக்குநர் பண்ண பெரிய தப்பு என முதலாளி ஒரே போடாக போட்டு விட்டாராம். குறைந்த செலவில் பண்ணியிருந்தால், இந்த படமே ஹிட்டு தான் என்றும் பெருசா வசூல் வரும் என பில்டப் செய்துவிட்டு முதலுக்கே மோசம் வந்துவிட்டது என்றும் ஏகப்பட்ட குடைச்சல்களையும் கூடவே கொண்டு வந்து சேர்த்து விட்டார் என டைரக்டருக்கு செம டோஸ் விழுந்துள்ளதாம்.

சொந்த காசுல சூனியம்: மேலும், சொந்த காசுல சூனியம் வச்சிக்கிட்ட மாதிரி ஒரு வேலையை பண்ணியிருக்க என டைரக்டரை திட்டி தீர்த்த காண்டில் தான் அவர் தனது கோபத்தை அப்படி கொப்பளித்து விட்டார் என்கின்றனர். கடந்த ஆண்டு குரு 8 அடி பாய்ந்த நிலையில், இந்த வருஷம் சிஷ்யபுள்ள 16 அடி பாய்ந்து விட்டார் என வஞ்சப் புகழ்ச்சி அணியில் வசைபாடி விட்டார் முதலாளி என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X