நடிகையுடன் ஒல்லி இயக்குநர் கேரவனில் கூத்து?.. இவங்க சுகத்துக்கு நம்ம காசா? டென்ஷனான தயாரிப்பாளர்..

By Staff

சென்னை: கேரவனில் ஒல்லி இயக்குநர் நடிகையுடன் சரியாக கூத்து அடித்ததாகவும் அதனால்தான் அந்தப் படம் பாதியில் நின்றுவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

வாரிசு குடும்பத்தை சேர்ந்தவர்தான் அந்த நடிகர். என்னதான் தனது தந்தை சினிமாவில் பெயர் தெரியும்படி இருந்தாலும் குடும்பம் என்னவோ மிடில் கிளாஸ்தான். ஒருவழியாக படிக்கும்போதே நடிப்பதற்கு வந்துவிட்டார் நடிகர். முதல் படத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சொல்லப்போனால் வரவேற்பை விட விமர்சனமும், கிண்டல்களும் அதிகம் கிடைத்தன.

director had a proper tiff with the actress and thats why the film was stopped halfway through

புலி பாய்ச்சல்: அதனையடுத்து நடிகர் நடித்த இரண்டாவது படம் மெகா ஹிட்டானது. அதிலும் இவருக்குள் இப்படி ஒரு நடிகரா என்று கிண்டல் செய்தவர்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்து பார்த்தனர். அப்புறம் என்ன நடிகருக்கு வரிசையாக வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதனை சரியாக பயன்படுத்தி தன்னுடையை திறமையையும் வளர்த்துக்கொண்டு சரசரவென வளர்ந்தார் மனிதர்.

நடிப்பு மட்டுமில்லை: நடிகருக்கு நடிப்பு மட்டுமில்லை பல துறைகளும் கைகூடி வந்தன. அதில் ஒன்றுதான் இயக்கம். இவர் இயக்கப்போகிறார் என்றதும் எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்றுதான் பேசினார்கள். ஆனால் வழக்கம்போல் இதையும் காதில் போட்டுக்கொள்ளாத அவர் சீனியர் நடிகரை ஹீரோவாக்கி படம் செய்தார். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.

ஒருபக்கம் நடிப்பு, மறுபக்கம் இயக்கம்: இயக்குநராக முதல் படம் வெற்றியால் மிகப்பெரிய உற்சாகமாகிய நடிகர் அடுத்த வருடமே இனிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்க ஒத்துக்கொண்டார். அதுவும் மல்டி ஸ்டாரர் படமாக இயக்கவிருந்தார். அதில் தெலுங்கு பெரிய குடும்பத்து நடிகர், தமிழ்நாட்டின் சீனியர் நடிகர் ஒருவர், தாடி நடிகர் ஒருவர், இந்திய அளவில் பிரபலமான இயக்குநரின் படத்தில் நடிகை என பலரை கமிட் செய்தார் ஷூட்டிங் சென்றார்.

கேரவன் கூத்து: முதல் ஒரு வாரம் ஷூட்டிங் சிறப்பாகவே சென்று சென்றிருக்கிறது. இவரும் மிகவும் டெடிகேஷனாக வேலை செய்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஹீரோயினுடன் நடிகர் கம் இயக்குநருக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இரண்டு பேருக்குமான பழக்கம் ஓவர் நெருக்கமாக இயக்கத்தின் மீதிருந்த நடிகரின் கவனம் மற்ற வேலைகள் மீது சென்றுவிட்டதாம்.

அதிலும் நடிகை போதையும், மற்ற போதையும் நடிகருடைய தலையின் உச்சிக்கு ஏறியதால் ஷூட்டிங் முடியும்வரைக்கூட அவரால் காத்திருக்க முடியவில்லையாம். பட்டப்பகலில் ஷூட்டிங் நடந்துக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய உதவி இயக்குநர்களிடம் ஷூட்டிங் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நடிகையின் கேரவனுக்குள் சென்றுவிடுவாராம். யார் வந்து கூப்பிட்டாலும் டயர்டா இருக்கு போங்க வரேன் என்று சொல்வதையே வேலையாக வைத்திருந்தாராம்.

படத்தில் கமிட்டாகியிருந்த நடிகர்களும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருந்தனராம். அப்படி ஒரு நாள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவரே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது நடிகர் நடிகையுடன் பொழுதை கழித்ததை பார்த்த அவர், இந்தாளு சுகத்துக்கு நம்ம காசு வீணாகணுமா என தனது தயாரிப்பு நிர்வாகிகளிடம் சத்தம் போட்டு எடுத்தது எல்லாம் போதும் நிறுத்துங்கய்யா படத்தை என்று சொல்லிவிட்டாராம். அதனால்தான் அந்தப் படம் பாதியிலேயே நின்றுபோய்விட்டதாம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X