அதுக்கு அவர் செட் ஆக மாட்டாரு.. ஹீரோ மாத்துனா படம் பண்ணலாம்.. உடனடியாக ஓகே சொன்ன டைரக்டர்!

சென்னை: இளம் மாஸ் நடிகருக்கு, கிடைக்க வேண்டிய வாய்ப்பு, அதிக பட்ஜெட் காரணமாக மற்றொரு பிரபல ஹீரோவுக்கு சென்றுள்ளது.

காப்பி இயக்குநர் இயக்கிய முதல் படத்திலும், அந்த இளம் மாஸ் ஹீரோ நடிக்க இருந்த நிலையில், அந்த வாய்ப்பு அவருக்கு மிஸ் ஆனது.

இந்நிலையில், அதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் அந்த இளம் நடிகருக்கு அமைந்துள்ளது.

பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த அந்த ரவுடி இயக்குநர், வேற வழி தெரியாமல் உடனடியாக ஓகே சொல்லி விட்டாராம்.

நட்பா? லைஃபா?

நட்பா? லைஃபா?

மாஸ் நடிகருக்கும், ரவுடி இயக்குநருக்கும் நீண்ட நாள் நட்பு இருக்கிறது. இந்த முறை நீதான் என் படத்துக்கு ஹீரோ என வெயிட்டான கதையை ரெடி பண்ணி, பெரிய நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி உள்ளார் அந்த ரவுடி இயக்குநர். ஆனால், யாருமே அவ்வளவு பெரிய பட்ஜெட்டுக்கு, பணம் போட தயாராக இல்லை.

சும்மா இருந்தார்

சும்மா இருந்தார்

இதனால், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் புதுப்படங்களில் ஏதும் கமிட் ஆகாமல், சும்மா கிடந்தார் அந்த இயக்குநர். சும்மா தானே இருக்கே, பார்ட் டைமா எனக்கு பாடி கார்டு வேலை பாருன்னு, அந்த நம்பர் நடிகை அழைத்த இடத்துக்கெல்லாம், போயிட்டு வந்த படி இருந்த இயக்குநருக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் போர் அடித்து விட்டது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

மறுபுறம், அந்த இளம் மாஸ் ஹீரோ அதிக பட்ஜெட்டில், பெரிய ஹீரோயின்களை நடிக்க வைத்து எடுத்த எல்லா படங்களும், வந்த வேகத்தில் சுவடே தெரியாமல், காணாமல் சென்று, படு தோல்வியை சந்தித்தன. அதனால், இந்த புராஜெக்டை உடனடியாக ஸ்டார்ட் பண்ணு என இயக்குநருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

கை விரித்த பெரிய நிறுவனம்

கை விரித்த பெரிய நிறுவனம்

அந்த மாஸ் நடிகரின், சமீபத்திய ஹை பட்ஜெட் படம், ஓடினால், நிச்சயம் அந்த படத்தை தாங்கள் தயாரிக்கிறோம், என முன் வந்த அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம், அந்த படமும், பிக் ஃப்ளாப் ஆனதை அறிந்து, இதற்கு மேல, அந்த ஹீரோ பெரிய பட்ஜெட் படத்துக்கு செட் ஆக மாட்டார் என கை விரித்தது.

ஹீரோவை மாத்துங்க

ஹீரோவை மாத்துங்க

உங்க கதை, ரெண்டு ஹீரோயின் எல்லாமே நல்லாத்தான் இருக்கு, ஆனால், இந்த ஹீரோ வேண்டாம். ஹீரோவை மாத்துங்க, நிச்சயம் படம் பண்ணலாம், என மற்றொரு புதிய தயாரிப்பு நிறுவனம், நம்பிக்கை கொடுக்க, நட்பா? லைஃபா? யோசித்த அந்த இயக்குநர், உடனடியாக ஹீரோவை மாற்ற ஓகே சொல்லிவிட்டார்.

ஹீரோ அப்செட்

ஹீரோ அப்செட்

அந்த இரண்டு பெரிய ஹீரோயின்களுடன் ஏற்கனவே தனித் தனியாக ஜோடி போட்டு, நடித்த அந்த இளம் மாஸ் ஹீரோ, இந்த கதையில், தனக்கு வந்த வாய்ப்பு பறிபோனதை எண்ணி அப்செட் ஆகி உள்ளாராம். ஏற்கனவே, அந்த காப்பி இயக்குநர், அறிமுகமான முதல் படத்திலும், இவர் தான் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X