ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயினுடன் சில்மிஷம்.. நீ இன்னும் முளைக்கவே ஆரம்பிக்கல.. தூக்கியடித்த டைரக்டர்?
சென்னை: சமீபத்தில் இயக்குநருக்கும் அறிமுக ஹீரோவுக்கும் இடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய பிரச்சனையே வெடித்து விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஏற்கனவே அந்த அறிமுக ஹீரோ பிரபலம் ஆனதால் அவரை வைத்து படம் எடுத்து பிரபலம் ஆகிவிடலாம் என்கிற நினைப்பில் ஏகப்பட்ட பில்டப்புகளை அந்த இயக்குநர் அவரது ஹீரோவுக்காக செய்து வந்தார்.
நடிக்கவே வரவில்லை என்றாலும் அவரை வைத்து எப்படியாவது படத்தை எடுத்து விடலாம் என பெரும் போராட்டத்தை இயக்குநர் நடத்தி வந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடர்ந்து ஹீரோயினுக்கு தொல்லைக் கொடுக்க ஆரம்பித்து விட்டாராம் அந்த அறிமுக நடிகர்.

அதன் காரணமாக வெடித்த சண்டையில் தான் ஏன் படத்துக்கு நீ தேவையே இல்லை என இயக்குநர் தூக்கி அடித்து விட்டதாக கோடம்பாக்கத்தில் தற்போது பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
அறிமுக நடிகர்: சர்ச்சை நாயகனாக வலம் வரும் அந்த பிரபலம் நாமும் ஹீரோவாகி விடலாம் என நினைத்து ஆரம்பித்த முதல் படத்தில் இருந்தே அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பலரையும் ஹேப்பியாக்கி உள்ளது. எப்படியும் சீன் போடத்தான் இவர் படங்களில் நடித்து வருகிறார் என்றும் இவருக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் என பலரும் ட்ரோல் செய்து வந்த நிலையில், அனைவரது சாபமும் சும்மா விடவில்லை என மீண்டும் அந்த சர்ச்சை நாயகனை கலாய்த்து வருகின்றனர்.
காதலிக்கு டிமிக்கி: ஏற்கனவே லட்டு போல அந்த அறிமுக நாயகனுக்கு காதலி இருக்கும் நிலையில், புதிதாக நடித்து வரும் படத்தில் நடித்து வரும் ஹீரோயினுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டியிருக்கிறார் இளம் ஹீரோ. இவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகையே உங்களுக்குத்தான் ஆள் இருக்கே ஏன் என்னை தொல்லை பண்றீங்க என்றே கேட்டு விட்டாராம்.
டைரக்டருக்கு டார்ச்சர்: அந்த இளம் ஹீரோயினுடன் அதிகமான முத்தக் காட்சிகளை வைங்க என கேட்பது, நடிகை கட்டிப் பிடிக்கும் சீன் இல்லை என்றாலும் இவரே ஓவர்டோஸ் எடுத்துக் கொண்டு ஏகப்பட்ட சில்மிஷங்களை செய்வதாக செட்டில் அலப்பறை செய்துக் கொண்டிருந்த நிலையில் தான் டைரக்டர் டார்ச்சர் ஆகிவிட்டார் என்கின்றனர்.
அடிதடி சண்டை: பிரச்சனை பெரிதாக முற்றிய நிலையில் இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் இடையே அடிதடி சண்டை வரை சென்று விட்டதாகவும் தான் இல்லை என்றால் உன்னை எல்லாம் யாருக்குமே டைரக்டரா தெரியாது என நடிகர் வாய் விட்ட நிலையில் தான் இதற்கு மேலும், அவமானங்களை சந்தித்து விட்டு இந்த படத்தை இவரை வைத்து எடுக்க வேண்டாம் என்கிற முடிவுக்கே அந்த டைரக்டர் வந்ததாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











