For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெளியே சிரிப்பு.. உள்ளே பகை.. தெரிந்து கொண்ட இயக்குநர்.. பலியாடாக மாறிய நடிகர்!

  By Staff
  |

  சென்னை: ஒரு படம் வெற்றியடைந்தால் மீண்டும் இணைந்து பணியாற்றுவதும், தோல்வியடைந்து விட்டால் அந்த இயக்குநரை பரம எதிரியாக பார்ப்பதும் தொடர்ந்து அனைத்து சினிமா துறையிலும் இருந்து வருகிறது.

  சூட்டிங் ஸ்பாட்டில் அந்த பிரபல நடிகரை படாத பாடு படுத்தி எடுத்த இயக்குநர் மீது கடைசி வரை நடிகருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே ஏற்படவில்லையாம்.

  போதாக்குறைக்கு இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்து பேச்சுவார்த்தையே நின்று விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன.

  நாம 80 பர்சென்ட் சொன்னா.. விஜய் 200 பர்சென்ட் செய்வாரு.. வாரிசு ஸ்டண்ட் மாஸ்டர் சுவாரஸ்யம்! நாம 80 பர்சென்ட் சொன்னா.. விஜய் 200 பர்சென்ட் செய்வாரு.. வாரிசு ஸ்டண்ட் மாஸ்டர் சுவாரஸ்யம்!

  இயக்குநருக்கும் நடிகருக்கும் சண்டை

  இயக்குநருக்கும் நடிகருக்கும் சண்டை

  தனது கருத்தில் ஸ்ட்ராங்காக கடைசி வரை இருந்த இயக்குநருக்கும் தனது அடுத்த படம் அவ்ளோ தான் சோலி முடிஞ்சிது என நினைத்து வந்த நடிகருக்கும் இடையே சரியான சண்டை செட்டிலேயே நடைபெற்றதாக பேச்சுக்கள் கிளம்பி இருந்தன. எப்படிடா படத்தை இருவரும் முடித்துக் கொடுக்கப் போகின்றனர் என தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டுக் கொண்டு பார்த்திருந்தாராம்.

  சக்சஸ்

  சக்சஸ்

  ஆனால், நடிகர் அந்த அளவுக்கு பயந்தது போல எல்லாம் நடக்காமல், இன்னொரு படம் படு மொக்கையாக வெளியானதன் உதவியால் மிகப்பெரிய சக்சஸ் படமாகவே மாறி விட்ட நிலையில் தான் அந்த பிரபல நடிகர் நிம்மதி பெருமூச்சே விட்டாராம். உடனடியாக இயக்குநருக்கு போன் போட்டு பழைய பிரச்சனைகளை முடித்து விட வேண்டும் என பேசி உள்ளார்.

  மீண்டும் மலர்ந்த நட்பு

  மீண்டும் மலர்ந்த நட்பு

  படம் ஹிட் அடித்த நிலையில், பழைய பகையை மறந்து இயக்குநரை நடிகர் மனதார பாராட்டி உள்ளார். இயக்குநரும் இதுதான் சந்தர்ப்பம் என உணர்ந்து கொண்டு இந்த குதிரையை வைத்து இன்னொரு படத்தையும் பண்ணி விடலாம் என்கிற திட்டத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்.

  ஆடு தலையை ஆட்டிருச்சு

  ஆடு தலையை ஆட்டிருச்சு

  ஆடு தலையை ஆட்டினா ஒரே வெட்டாக வெட்டி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த இயக்குநருக்கு சாதகமாகவே அந்த நடிகர் பலியாடு போல சரிங்க பண்ணிடலாம் கதையை ரெடி பண்ணுங்க என சம்மதம் தெரிவித்து தலையை ஆட்ட, உடனடியாக ஸ்க்ரிப்ட்டை கையோடு கொடுத்து அடுத்த படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிச்சுடுங்க என சொல்லிட்டாராம்.

  தயாரிப்பாளரும் சிக்கிட்டாரு

  தயாரிப்பாளரும் சிக்கிட்டாரு

  நடிகர் தயாரிப்பாளரை பார்த்து என்னங்க உங்களுக்கு ஓகேவான்னு கேட்க, லாபம் நல்லாத்தான் வந்துருக்கு, பண்ணுவோம் என அவரும் வாய்க் கொடுத்து சிக்கி உள்ளாராம். படம் மட்டும் ஹிட் ஆகாமல் நடிகர் நினைத்து பயந்ததை போல சொதப்பி இருந்தால் இந்நேரம் நடந்திருக்கிற கதையே வேறு என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  மனதுக்குள் பகை

  மனதுக்குள் பகை

  ஆனால், அந்த இயக்குநருடன் வெளிப்படையாக சிரித்துப் பேசி மகிழ்ந்தாலும், உள்ளுக்குள் இன்னமும் உண்மையான அன்பும் நெருக்கமும் வரவில்லை என்று தான் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இதை அறிந்து கொண்டு தான் அடுத்த படத்திலும் நடிகரை வச்சு செய்யலாம் என இயக்குநர் இப்படியொரு திட்டம் போட்டு காரியத்தை தனக்கு சாதகமாக சாதித்துக் கொண்டதாக கூறுகின்றனர்.

  காத்திருக்கணும்

  காத்திருக்கணும்

  இந்த நடிகரை விட்டு விட்டாலும், அடுத்தவொரு முன்னணி நடிகரை வைத்து படம் பண்ண வேண்டும் என்றாலும், இப்போதைக்கு பெரிய நடிகர் யாருமே ஃப்ரீயாக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்பதை புரிந்து கொண்ட இயக்குநர் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என பக்கவாக ஸ்கெட்ச் போட்டு தனது காரியத்தை சாதித்துக் கொண்டார் என கோடம்பாக்கத்தில் இயக்குநரை பெருமையாக பாராட்டி பேசி வருகின்றனர்.

  English summary
  Director puts checkmate to the popular actor after gives a success movie. Actor also hides his anger and once again join hands with the director for the next movie shocks the industry.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X