»   »  'அதையும் நானே பண்றேன்'… ஆசைபட்ட ஹீரோ… நோ சொன்ன இயக்குநர்!

'அதையும் நானே பண்றேன்'… ஆசைபட்ட ஹீரோ… நோ சொன்ன இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோட் நடிகரின் கால்ஷீட் கிடைக்காதா என்று இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காத்திருக்கின்றனர். ஆனால் மூன்றாவது முறையாக கால்ஷீட் வாங்கிய இயக்குநரும், முதன்முறையாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளரும் அதனை மதிப்பதாகத் தெரியவில்லை.

தயாரிப்பாளரின் வருத்தம் பட்ஜெட் எகிறுவதுதான். இதுவரையிலும் நடிகரின் சம்பளம், வெளிநாட்டு ஷூட்டிங் என போட்டு வைத்த பட்ஜெட்டில் முக்கால்வாசியை முழுங்கி விட்டது. இதில் ஹிந்தி ஹீரோவை படத்திற்குள் நுழைக்கவும் ஒரு பாடலுக்கு ஒரு ஹிந்தி நடிகையை ஆட வைக்கவும் இயக்குநர் ஆசைப்படுகிறார். இதற்கெல்லாம் தயாரிப்பாளர் தடை விதிக்க, மல்லுக்கட்டு சென்றுகொண்டிருக்கிறது.

அந்த ஹிந்தி நடிகருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கேரக்டரையும் சேர்த்து தானே பண்ண நடிகருக்கு ஆசையாம். சுள்ளான்கள்லாம் டபுள் ஆக்ட் கொடுக்கும் நேரத்தில் நடிகருக்கு மீண்டும் டபுள் ஆக்ட் ஆசை வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஆனால் இயக்குநர் அதற்கு மறுப்பு சொன்னது தான் ஆச்சர்யம்.

ஆக, இந்த காம்பினேஷனுக்கு எண்ட்கார்டா?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Coat actor wants to play double roles again in his upcoming movie, but his director has rejected actor's wish

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil