அது மட்டும் தான் உனக்குத் தெரியும்.. உங்க அம்மா போல நடிக்க தெரியாது.. நடிகையை விளாசிய பிரபலம்?
சென்னை: பிரபல வாரிசு நடிகையை சமீபத்தில் டைரக்டர் ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கண்டபடி திட்டியதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. சினிமாவில் நடிகைகள் வெறும் கவர்ச்சி பொருளாக மட்டுமின்றி நல்ல பர்ஃபார்மன்ஸ் பண்ணும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.
ஆனால், ஒரு சில வாரிசு நடிகைகள் பெரிதாக நடிப்பின் மீது அக்கறை எல்லாம் இல்லாமல் முடிந்தவரை ஆடைகளை குறைத்து நடித்து கவர்ச்சி சிலையாக மட்டுமே மாறி பல முன்னணி நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

சில ஆண்டுகள் கழித்த பின்னர், நல்ல படங்களில் நடித்து சிறந்த நடிகை என பெய வாங்கிக் கொள்ளலாம் என்றும் அப்படியே ஸ்டார் நடிகையாக மாறிவிடலாம் என கணக்கு போட்டு வாழ்ந்து வருகிறார்கள் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவங்க அம்மா எப்பேற்பட்ட நடிகை: பிரபல வாரிசு நடிகையாக வலம் வரும் நடிகைக்கு பெரிதாக நடிப்பே வரவில்லை என்றும் அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி காட்சிகள் மட்டுமே உள்ளதாகவும், ஒரு சீன் கூட நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் நடிப்பதில்லை என்றும் ஆனால், அவரது அம்மா எல்லாம் அந்த காலத்தில் முதல் படத்தில் இருந்தே பெரிய நடிகையாக ஒட்டுமொத்த சினிமா உலகையும் கட்டியாண்டார் என டைரக்டர் ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட் செட்டிலேயே பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
அழவே தெரியல: க்ளிசரின் வைத்துக் கொண்டு தான் அழும் காட்சியில் கூட நடிப்பேன் என்றும் க்ளிசரின் ஊற்றிக் கூட அழுவது போல நடிக்காமல் வாயெல்லாம் திறந்து வைத்துக் கொண்டு பல் தெரிய சிரிப்பது போல அந்த வாரிசு நடிகை நடிப்பதை பார்த்து தலையிலேயே அடித்துக் கொண்டாராம் டைரக்டர் என உதவி இயக்குநர் தனது குழுவுடன் பேசி சிரித்தார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
வெறும் கிளாமர் பொம்மை: இன்ஸ்டாகிராமில் எந்தளவுக்கு மோசமாக கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ஃபாலோயர்களை ஏற்றி வருகிறாரோ அதே வேலையைத்தான் சினிமாவிலும் செய்து வருகிறாராம். காதல் பாடலுக்குக் கூட ஓவர் கவர்ச்சியாக உடலை காட்டி நடிப்பேன் என்றே அடம்பிடித்து வருகிறார் நடிகை என டைரக்டர் பேசிய வார்த்தைகள் ஒட்டுமொத்த யூனிட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகவும் இந்த தகவல்கள் நடிகையின் காதுகளுக்கு சென்ற நிலையில், அதெல்லாம் தன்னுடைய ஸ்ட்ராட்டர்ஜி என்றும் இன்னும் சில ஆண்டுகள் கழித்து இந்த இயக்குநரே அம்மாவை விட நான் நல்லா நடிக்கிறேன்னு பாராட்டுவார்னு சொல்லிவிட்டு போய்விட்டாராம்.


Click it and Unblock the Notifications











