மனைவியுடன் Mutual புரிதல்.. நடிகையுடன் சிறகடித்து பறக்கும் இயக்குநர்.. ஷாக்கில் உதவி இயக்குநர்கள்
சென்னை: சினிமா உலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணியை விட விசித்திரக் கூட்டணிகள்தான் அதிகம் பேசப்படும். அந்த வகையில், தடம் பதித்து, தற்போது ரிலீஸாக தயாராக இருக்கும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்கி முடித்துள்ள அந்த ஸ்டைலிஷ் இயக்குநரின் வாழ்க்கையில் தான் இப்போது ஒரு புதிய புயல் வீசத் தொடங்கியிருக்கிறது.
திரைத்துறையில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி, குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோக்களின் ஃபேவரிட்டாக மாறியவர் அந்த இயக்குநர். சினிமா ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, அவரது சொந்த வாழ்க்கையும் எந்தப் புகாரும் இல்லாமல் தான் சென்று கொண்டிருந்தது. காதலித்து கரம் பிடித்த மனைவியுடன் நீண்ட காலங்களாக ஒரு பிரிக்க முடியாத தம்பதியாகவே வலம் வந்தார்கள். ஆனால், சமீபகாலமாக அந்தப் பிணைப்பில் ஏதோ ஒரு விரிசல் விழுந்திருப்பதாகத் திரையுலகில் பேச்சு பலமாக அடிபட்டது.
பொதுவாக சினிமா உலகில் விவாகரத்து அல்லது பிரிவு என்றால் நீதிமன்றப் படிகள் ஏறி, சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு மீடியாக்களில் சண்டை போடுவதுதான் வழக்கம். ஆனால், இந்த இயக்குநர் தனது மனைவியுடன் மிகவும் பக்குவமாகப் பேசி, ஒரு 'மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்'குக்கு (Mutual Understanding) வந்துவிட்டாராம். "இருவரும் அவரவர் பாதையில் சுதந்திரமாகப் பயணிக்கலாம், ஒருவருக்கொருவர் தலையிடக் கூடாது" என்ற பரஸ்பர புரிதலோடு தங்களது திருமண வாழ்க்கைக்கு ஒரு சைலண்ட் எண்ட் கார்டு போட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகையுடன் காதல்: மனைவியுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நிமிடமே, இயக்குநர் தனது அடுத்த இன்னிங்ஸை ஜெட் வேகத்தில் ஆரம்பித்துவிட்டார்!. தற்போது ரிலீஸாக இருக்கும் அவரது புதிய படத்தில் நடித்துள்ள ஒரு இளம் பாலிவுட் நடிகையுடன் இயக்குநருக்குப் புதுக் காதல் மலர்ந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் தொடங்கிய இந்த கெமிஸ்ட்ரி, இப்போது எல்லைகளைக் கடந்து சிறகடித்துப் பறக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. அந்த நடிகையின் அழகிலும் பாசத்திலும் மொத்தமாக விழுந்துவிட்ட இயக்குநர், இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டை விட அந்த நடிகையின் வீட்டில்தான் அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறாராம்.
முக்கிய முடிவுகள்: விஷயம் இதோடு நின்றால் பரவாயில்லை. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தச் சூழலில், படத்தின் முக்கிய முடிவுகள், எடிட்டிங் மாற்றங்கள் என அனைத்தையும் அந்த நடிகையின் சாய்ஸைக் கேட்டுத்தான் இயக்குநர் முடிவு செய்கிறாராம்.
பதற்றத்தில் உதவி இயக்குநர்கள்: இதையெல்லாம் பார்த்துக் கதறிப் போயிருப்பது வேறு யாருமல்ல, இயக்குநரின் தீவிர விசுவாசிகளாக இருக்கும் அவரது உதவி இயக்குநர்கள்தான்! "சார்... படம் ரிலீஸாக இன்னும் சில வாரங்களே இருக்கு, ஏகப்பட்ட வேலைகள் பாக்கி கிடக்கு. ஆனா நீங்க இப்படி அந்த நடிகையோடவே சுத்திட்டு இருந்தா எப்படி?" என்று அவர்கள் கேட்க நினைத்தாலும், இயக்குநரின் முகத்தைப் பார்த்துக் கேட்க முடியாமல் ஷாக்கில் உறைந்து போயிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் முன்பே இயக்குநரின் இந்தத் திடீர் காதல் லீலைகள் தான் இப்போது திரைத்துறை வட்டாரத்தின் ஹாட் டாபிக்.


Click it and Unblock the Notifications