அந்த 2 பேர் மாதிரி எனக்கும் அட்ஜஸ்ட் பண்ணுங்க: ஹீரோவுக்கு இயக்குநர் கோரிக்கை
சென்னை: ஹீரோ ஒருவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுமாறு இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளாராம்.
ஹீரோ ஒருவர் பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் இதற்கிடையே அவர் பிரபல தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனால் பிரபல இயக்குநர் படத்தில் நடிகர் நடிக்கவில்லை, படம் டிராப் என்றெல்லாம் பேச்சு கிளம்பியது.
படம் கைவிடப்படவில்லை என்று இயக்குநர் விளக்கம் அளித்தார், நடிகரும் அதை உறுதி செய்தார். இதையடுத்து இயக்குநர் படப்பிடிப்பை நடத்த தயாராகி வருகிறார்.

படப்பிடிப்பு
மலைப்பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குநர். படத்தை பிரமாண்டமாக எடுப்பதால் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்டுகளை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர். இந்நிலையில் ஹீரோவோ ஞாயிற்றுக்கிழமைகளில் நான் வேலை செய்ய மாட்டேன் என்று கூறி இயக்குநரின் தலையில் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

ஹீரோ
ஹீரோ ஞாயிற்றுக்கிழமை நடிக்காவிட்டாலும் ஜூனியர் ஆர்டிஸ்டுகளுக்கான செலவை தயாரிப்பாளர் கொடுத்தே ஆக வேண்டும். இதனால் தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவு ஏற்படும். நடிகரோ நான் எப்பொழுதுமே ஞாயிற்றுக்கிழமை வேலை பார்ப்பது இல்லை என்று கூலாக சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

கோரிக்கை
பிரபல தயாரிப்பாளரின் படத்தில் நடித்து வரும் அந்த ஹீரோ ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் முன்னதாக காதலை கொண்டாடும் இயக்குநரின் படத்தில் நடித்தபோதும் ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நடிகர். அந்த படப்பிடிப்பு தளத்தில் அவர் சின்சியராக இருந்தது பற்றி தான் அப்பொழுது பெரிதாக பேசப்பட்டது. அந்த இருவருக்காக மட்டும் தனது கொள்கையை தளர்த்தியிருக்கிறார் நடிகர்.

இயக்குநர்
சார், அந்த 2 பேருக்காக அட்ஜஸ்ட் செய்த நீங்கள் கொஞ்சம் எங்களுக்காகவும் அட்ஜஸ்ட் பண்ணலாமே என்று இயக்குநரும், தயாரிப்பாளரும் நடிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். நடிகர் என்ன சொல்கிறார் என்பதை பார்த்த பிறகே படப்பிடிப்பை துவங்குவாராம் இயக்குநர். தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நடிகர் இறங்கி வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த இயக்குநருக்காக அட்ஜஸ்ட் செய்தால் இனி நடிக்கும் படங்களின் இயக்குநர்களும் அதையே கேட்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











