ஒரே மாதிரி நடிக்காதீங்க.. சொல்றத கேளுங்க.. செட்டிலேயே வெரைட்டி நடிகரை வெளுத்த விருது இயக்குநர்!
சென்னை: விருது இயக்குநர் படத்தில் நடித்து வரும் வெரைட்டி நடிகரை இயக்குநர் வெளுத்த விஷயம் கோடம்பாக்கத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ஹீரோவாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் வெரைட்டி நடிகர் நடித்து வரும் படங்கள் எல்லாம் ஹிட்டாகி வரும் நிலையில், வெரைட்டி நடிகரை செட்டிலேயே இயக்குநர் கடிந்து கொண்டது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
தொடர்ந்து அந்த நடிகரின் படங்கள் படு தோல்வி அடைந்து வரும் நிலையில் தான் இயக்குநர் இப்படி எகிறி உள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அட்வான்ஸா வாங்கி
நல்ல நடிகர் என பெயர் எடுத்த நிலையில், பட்டியல் போட்டு ஏகப்பட்ட தயாரிப்பாளர்களிடம் நடிப்பதாக கால்ஷீட் கொடுத்து அட்வான்ஸாக அள்ளி போட்டு வருகிறார் என்றும் யாரிடமும் கதையை சரியாக கேட்டு நடிப்பதில்லை என்றும் ஒரே நாளில் பல படங்களில் நடிப்பதால் எதிலுமே சரியான கான்சென்ட்ரேஷன் செய்வது இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

தன் இஷ்டத்துக்கு
எந்த இயக்குநர் படம் என்றாலும் அவர்கள் சொல்வதை கேட்டு நடிக்காமல் தன் இஷ்டத்துக்கு தனக்கு தோன்றியதை நடித்து விட்டு ஏகப்பட்ட கரெக்ஷன்களையும் சீன்களை மாற்றியும் அந்த நடிகர் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், விருது இயக்குநர் படத்தில் அவர் நடித்து வரும் படத்தில் பெரிய சிக்கல் உருவாகி உள்ளது.

ஒரே மாதிரி நடிக்காதீங்க
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அந்த வெரைட்டி நடிகர் விருது இயக்குநரின் படத்தை பெரிதும் நம்பி உள்ளார். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் விருது இயக்குநர் எதிர்பார்த்த நடிப்பு அவரிடம் இருந்து வெளியே வராத நிலையில், கடுப்பான இயக்குநர் ஒரே மாதிரி நடிக்காதீங்க, தேவையில்லாமல் கேரக்டரில் காமெடியை திணிக்காதீங்க, சொல்றதை கேளுங்க என செட்டில் பலர் முன்னிலையில் கடிந்து விட்டாராம்.

நடிகர் அப்செட்
விருது இயக்குநர் இப்படி பல பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதால் நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி விட்டார். ஆரம்ப காலம் என்றால் பரவாயில்லை இயக்குநர் திட்டை எல்லாம் சர்வ சாதாரணமாக வாங்கி இருப்பார். ஆனால், இப்போது வளர்ந்த நிலையில் இப்படி திட்டு வாங்கியதை எண்ணி நடிகர் மன வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த படத்தில் இருந்து விலகல்
ஏற்கனவே ஒல்லி நடிகர் நடிப்பில் வெளியான விருது இயக்குநரின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வெரைட்டி நடிகரை புக் செய்த நிலையில், சில நாட்கள் மட்டும் நடித்து விட்டு விலகி விட்டார் வெரைட்டி நடிகர். அதற்கு ஒல்லி நடிகர் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கும் வெரைட்டி நடிகர் தான் காரணமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











