சான்ஸ் கிடைச்சா போதும்.. தயாரிப்பாளர் சொன்னதும் டக்கென ஹீரோவை தூக்கி எறிந்த இயக்குநர்!
சென்னை: அந்த ஹீரோ தான் வேண்டுமா, மறுபரிசீலனை செய்யலாமா என தயாரிப்பாளர் கேட்ட மாத்திரத்திலேயே ஹீரோயினை தூக்கி எறிந்து விட்டு வேறு ஹீரோவை கடைசி நேரத்தில் களமிறக்கி விட்டார் அந்த இயக்குநர் என பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
எப்படியாவது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும், வேறு எதுவும் தேவையில்ல, யாரும் தேவையில்லை என்கிற மனநிலையில் தான் இயக்குநர் இருந்து வந்ததது தெளிவாக புரிகிறது என கோடம்பாக்கம் முழுவதும் ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.
கடைசி நேரத்தில் அந்த வாரிசு நடிகர் தூக்கி எறியப்பட்ட நிலையில், ரொம்பவே மன வருத்தத்திற்கு ஆளாகி உள்ளார் என கூறுகின்றனர்.

அப்பா பெயரை சொல்லி பிசினஸ்
படத்தில் யாரை ஹீரோவாக போட்டு எடுத்தால் என்ன அப்பா பெயரை சொல்லி பிசினஸ் பண்ணி விடலாம் என நினைத்தே இந்த படத்தை ஆரம்பித்து இருக்கிறார் அந்த பெரிய இடத்து வாரிசு. அப்பாவும் மகளின் மனம் ஏற்கனவே கஷ்டப்பட்டு கிடக்கு, மேலும், கஷ்டப்படுத்த வேண்டாம் என சில நாட்கள் நடித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.

ஹீரோவை மாற்ற வலியுறுத்தல்
கடைசி நேரத்தில் இந்த ஹீரோ தான் தேவையா? தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்கள் ரெண்டாவது ஷோ கூட தாண்ட மாட்டுதே, கொஞ்சம் யோசித்து முடிவெடுங்க என்று தான் தயாரிப்பு தரப்பு மறைமுகமாக சொல்லியிருக்கு, ஆனால், இதையே காரணமாக வைத்து படத்தின் ஷூட்டிங்கை தள்ளிப் போட்டு விடுவார்களோ என்கிற பயத்தில் இயக்குநர் அதிரடியாக அந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

கடைசி நேர ட்விஸ்ட்
அந்த இயக்குநர் இயக்கத்தில் உச்ச நடிகர் நடிக்கப் போகிறார் என்பது உறுதியான நிலையில், ஹீரோவாக நடிக்க வேண்டிய நபருக்கு பதிலாக, வேறு இரு நபர்களை அதிரடியாக களமிறக்க தயாரிப்பு தரப்பு எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் அதிரடியாக அனைத்துக்கும் ஓகே சொல்லி விட்டதாம்.

ஹீரோவுடன் பிரச்சனை
அந்த ஹீரோவை அதிரடியாக மாற்ற தயாரிப்பு நிறுவனம் முனைப்பு காட்டுவதற்கு பின்னணியில் இன்னொரு விஷயமும் உள்ளது என்கின்றனர். தயாரிப்பு தரப்புக்கு போதிய மரியாதையை அந்த ஹீரோ கொடுக்காமல் தெனாவட்டாக சில இடங்களில் கெத்துக் காட்டியது தான் ஹீரோவுடனான பிரச்சனைக்கே காரணம் என்றும் புகையத் தொடங்கி இருக்கிறது.

கவலையில் ஹீரோ
கடைசி நேரத்தில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கிற வருத்தத்தில் அந்த வாரிசு நடிகர் ரொம்பவே ஃபீல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசி நேரத்தில் ஹீரோவே மாற்றப் போகிறோம் என்பதை கூட அந்த இயக்குநர் சொல்லாமல் மறைத்து விட்டது தான் அவருக்கு ரொம்பவே சங்கடத்தை கொடுத்துள்ளதாக பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

படம் ஓடுமா
இதுவரை அந்த இயக்குநர் எடுத்த எந்தவொரு படமும் ஓடவில்லை. இந்த படமாவது ஓடுமா? என்கிற கிண்டல் பேச்சுக்களும் ஒரு பக்கம் கிளம்பி உள்ளன. எப்படியோ உச்ச நட்சத்திரம் பெயரை ஒருவர் கெடுத்த நிலையில், இன்னொருவராவது கெடுக்காமல் இருந்தால் சரி என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











