ராத்திரி தூங்க விடாம இயக்குநர் கொடுத்த டார்ச்சர்!.. காதலனிடம் கதறி அழுத நடிகை.. என்ன ஆச்சு?
ஹைதராபாத்: சைக்கோ இயக்குநர் படத்தில் பெரிய சம்பளம் கிடைக்கிறதே என ஆசையாக சென்ற அந்த நடிகை இனிமேல் அந்த இயக்குநர் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்கிற முடிவுக்கே வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
படம் முழுக்கவே பல காட்சிகளை இரவு நேரங்களில் தூங்க விடாமல் நடிகையை டார்ச்சர் செய்து எடுத்துள்ளாராம். தனது காதலனிடம் இதையெல்லாம் சமீபத்தில் சந்தித்தபோது அந்த நடிகை சொல்லி அழுதுள்ளதாக காத்துவாக்குல பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

மேலும், ஆரம்பத்தில் அந்த நடிகைக்குத் தான் முக்கியத்துவம் என்றெல்லாம் சொல்லி விட்டு படு நெருக்கமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கிய இயக்குநர் கடைசியில் இன்னொரு நடிகைக்கு கொடுத்த முக்கியத்துவம் தான் நடிகையை அப்செட் ஆக்கி விட்டது என்றும் பேசிக் கொள்கின்றனர்.
எல்லை மீறிய காட்சிகள்: அந்த சைக்கோ இயக்குநர் படத்தில் ஏகப்பட்ட எல்லை மீறிய காட்சிகள் இடம்பெற்று இருந்தன. ஆரம்பத்தில் நடிகையிடம் இப்படியெல்லாம் இருக்கும் என்று அந்த இயக்குநர் சொல்லவில்லை என்றும் படம் ஆரம்பித்து போய்க் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு சீனாக சேர்த்துக் கொண்டே போன நிலையில், கிடைத்த வாய்ப்பை விட்டு விட வேண்டாமே என நடிகையும் அனைத்துக்கும் பொறுத்துப் போய் நடித்துக் கொடுத்திருக்கிறாராம்.
நைட் ஷூட்டிங் தான்: இந்த படத்தின் மூடே நைட் எஃபெக்ட்டில் தான் இருக்கணும் என முடிவு பண்ணிய அந்த சைக்கோ இயக்குநர் பல இரவுகளில் நடிகையை தூங்க விடாமல் வைத்து ஷூட்டிங் செய்துள்ளாராம். ஆரம்பத்தில் வேறு மாதிரி எடுத்து வந்த இயக்குநர் ஒரு கட்டத்துக்கு மேல் உச்சகட்ட காட்சிகளை எடுக்க ஆரம்பித்த நிலையில், வசமாக வந்து சிக்கிக் கொண்டோம் என நினைத்த நடிகை சமீபத்தில் தனது காதலனை சந்தித்த நிலையில், அனைத்தையும் சொல்லி அழுதுள்ளாராம்.
நடிக்க மாட்டேன்: சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான் என நடிகர் ஆறுதல் கூறினாராம் காதலர். ஏற்கனவே அந்த இயக்குநர் படத்தில் இவரும் படாத பாடு பட்ட நிலையில், அதையும் சொல்ல, இனிமேல் அந்த இயக்குநர் படத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என நடிகை முடிவு செய்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் பல ஆண்டுகள் கழித்து அந்த இயக்குநர் கொடுத்த டார்ச்சர்களையெல்லாம் பெயர் சொல்லாமல் நடிகை ஏதாவது ஒரு பேட்டியில் வெளிப்படுத்துவார் என்றும் சினிமா வட்டாரத்தில் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











