ஹீரோ தேர்வில் மூக்கை நுழைக்கும் ஹீரோயின்.. பயங்கர கடுப்பில் இயக்குநர்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: பிரபல நடிகை தனக்கான ஹீரோவை தேர்வு செய்யும் விஷயத்தில் படத்தின் இயக்குநருக்கே அட்வைஸ் செய்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

டான்ஸ் நடிகர் படத்தில் நடித்து வரும் அந்த பிரபல நடிகைக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் தானாம்.

அப்படியென்றால், நீங்க எனக்கு ஜோடியில்லை இன்னொரு நடிகருக்கு ஜோடி என படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநர் எடுத்துக் கூற தனக்கான ஜோடி விஷயத்தில் நடிகை மூக்கை நுழைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக எழுந்துள்ளது.

ஒல்லி நடிகர் படத்தில்

ஒல்லி நடிகர் படத்தில்

சமீபத்தில் வெளியான ஒல்லி நடிகர் படத்தில் நாயகியாக நடித்து பெரும் புகழை பெற்ற நிலையில், அடுத்தடுத்து கோடம்பாகத்தில் மேலும், சில படங்களில் நடிக்க அந்த நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். டான்ஸ் நடிகர் படத்தில் நடிக்க தற்போது வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், நடிகைக்கு மன சங்கடம் ஒன்றும் உருவாகி விட்டதாம்.

ஹீரோயின் இல்லை

ஹீரோயின் இல்லை

மீண்டும் நம்மை ஹீரோயினாகத் தான் தேர்வு செய்துள்ளனர் என சந்தோஷத்தில் ஒகே சொன்ன அந்த நடிகை கதையை கேட்கும் போது தான் தான் ஹீரோயின் இல்லை என்றும் துணை கதாபாத்திரம் என்றும் தெரிய வந்திருக்கிறது. டான்ஸ் நடிகருக்கு ஜோடியாக தான் நடிக்கவில்லை என்பதால் கொஞ்சம் அப்செட் ஆகி இருந்தாலும், கிடைத்த வாய்ப்பை அவர் நழுவ விட விரும்பவில்லை.

இயக்குநருக்கே அட்வைஸ்

இயக்குநருக்கே அட்வைஸ்

துணை கதாபாத்திர நடிகைகளுக்கு முன்னணி ஹீரோவையா ஜோடியாக போட முடியும் கதைக்கு தேவையான நல்லா நடிக்கக் கூடிய நடிகரைத் தானே ஜோடியாய் போடுவார்கள். சில நடிகர்களை அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஆலோசித்து வருவதை அறிந்த அந்த நடிகை நேரடியாக இயக்குநருக்கே சில கண்டிஷன்களை போட்டு அட்வைஸ் கொடுத்திருப்பது செட்டில் இருந்த அனைவரையும் ஷாக் ஆக்கி விட்டதாம்.

மூக்கை நுழைத்து

மூக்கை நுழைத்து

வயதான நடிகரை யாரும் எனக்கு ஜோடியா போட்டு விடாதீங்க, நல்ல யங் ஹீரோவா புக் பண்ணுங்க நான் இன்னமும் ஹீரோயினாத்தான் நடிச்சிட்டு இருக்கேன். அப்புறம் தேவையில்லாமல் என் மார்க்கெட் போயிடும் என நடிகை ஓவராக பேச கடுப்பாகி விட்டாராம் அந்த இயக்குநர்.

ஹீரோவிடம் புகார்

ஹீரோவிடம் புகார்

டான்ஸ் நடிகரை அழைத்து இயக்குநர் தெளிவாக கூறி விட்டாராம். நாங்க யாரை ஃபிக்ஸ் பண்றோமா அவங்க கூட இவங்க நடிச்சா ஓகே இல்லைன்னா இவங்களுக்கு பதிலா இன்னொரு நடிகையை தேடிக்கலாம் என்று சொல்ல அந்த விஷயம் அம்மணி காதுக்கு சென்ற உடனே கப் சிப் ஆகிவிட்டாராம். இனிமேல் வாயையே திறக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு நடிகை வந்து விட்டதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கிறாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X