போகிற போக்கை பார்த்தால் இந்த இயக்குநரும் ஓடிடுவாரு போல.. புது பஞ்சாயத்தை ஆரம்பித்த டாப் நடிகர்!
சென்னை: அந்த இயக்குநர் தான் அத்தனை மாதங்களை வீணடித்தார் என்று பார்த்தால், தற்போது நடிகருக்கு என்ன மனவேதனைன்னே தெரியவில்லை இயக்குநரை போட்டு பாடாய் படுத்தி எடுப்பதாக பேச்சுக்கள் தினமும் அடிபட்டு வருகின்றன.
மாஸ் நடிகருக்கு சொன்ன கதை வேண்டாம் வேற ரெடி பண்ணுங்க என சொன்ன நிலையில், இன்னொரு கதையை கொடுக்க இது நல்லா இருக்கேன்னு சொன்ன நடிகர், மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக ஆகிவிட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
தயாரிப்பு நிறுவனத்திடமும் நடிகருக்கும் மத்தியில் மத்தளம் போல இயக்குநர் அடிவாங்கி வருவதாக கூறுகின்றனர்.

நல்லவேளை எஸ்கேப்
இப்படியொரு சிக்கலான படத்தில் கடைசி வரைக்கும் வேலை பார்த்தால் அந்த அன்பான இயக்குநர் நிலைமை ரொம்பவே மோசமாகி இருக்கும் என்றும் நல்ல வேளை அவர் எஸ்கேப் ஆகி விட்டார் என்றே புதிய இயக்குநர் புலம்பி வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. அந்த அளவுக்கு இயக்குநருக்கு நடிகர் தரப்பில் இருந்து அழுத்தம் அதிகமாகவே வருகிறதாம்.

சுதந்திரமே இல்லை
எப்போதும் ஒரு இயக்குநர் சிக்கி அவர் ஒரு கதை சொன்னால் உடனடியாக அந்த இயக்குநரை லாக் செய்து விட்டு தான் சொல்லும் கதையை படமாக இயக்க வைத்து சம்பவம் செய்து விடுவாராம் அந்த டாப் நடிகர். ஒரு இயக்குநர் சமீபத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வெளியே வந்த நிலையில், இன்னொரு இயக்குநர் கரும்பு ஜூஸ் மெஷினில் மாட்டியது போல மாட்டிக் கொண்டு முழிக்கிறாராம்.

அந்த நடிகருக்கு சொன்ன கதை வேண்டாம்
இயக்குநர்கள் உங்களை எளிதில் ஏமாத்திடுறாங்க பாஸ், அதனால் தான் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை என நடிகரின் அல்லக் கைகள் சமீப காலமாக அதிகமாக உசுப்பிவிட சமீபத்தில் நடிகர் ஓகே சொன்ன கதையும் ஏற்கனவே அந்த இளிச்சவாய் நடிகருக்கு சொன்ன கதை தான் என்கிற தகவலையும் நடிகரின் டீம் நடிகரின் காதுக்கு கொண்டு சென்ற நிலையில், அந்த நடிகருக்கு சொன்ன கதையும் வேண்டாம். ஃப்ரெஷ் சப்ஜெக்ட் பிடிங்க என இயக்குநருக்கு செக்மேட் வைத்து விட்டாராம் நடிகர்.

புதுக்கதைக்கு எங்கே போவேன்
நடிகரின் டார்ச்சர் தாங்காமல் புதுக்கதைக்கு எங்கே போவேன் என இயக்குநர் அல்லாடிக் கொண்டிருக்க, கைவசம் தன்னிடம் இருக்கும் சில ஆங்கில படங்களின் சிடிக்களை நடிகர் கொடுத்து இந்த படத்தில் இருந்து பாதியும், இந்த படத்தில் இருந்து கால் வாசியும், இந்த படத்தில் இருந்து கிளைமேக்ஸையும் எடுத்து மிக்ஸ் பண்ணி ஒரு படம் பண்ணுங்க செமய்யா ஓடும் என சொல்லியிருப்பதாக பூகம்பங்கள் கிளம்பி உள்ளன.

இவரும் ஓடிடுவாரோ
நிலைமை இப்படியே போய்ட்டு இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னர் அடுத்த இயக்குநரும் ஆளவிடுங்கடா சாமி என பாதியிலேயே ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என கலாய்த்து பேசும் பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் நடிகரின் படத்தின் அறிவிப்பு தாமதமாகி வரும் நிலையில், தீயாக பரவி வருகிறதாம்.

முற்றுப்புள்ளி வைக்க முடிவு
பேசுபவர்கள் ஆயிரம் பேசட்டும் நாம் நம் படத்தை கவனமாக இந்த முறை கொண்டு வர வேண்டும் என்பதில் நடிகர் ரொம்பவே ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். மார்ச் மாத இறுதிக்குள் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னதாக நடிகருக்கு பிடித்தபடி கதையில் மாற்றங்கள் நடந்து விடும் என தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











