செம கில்லாடி.. நடிகையை செமயா யூஸ் பண்ணிய இயக்குநர்?.. அந்த காசில்தான் மனைவிக்கு ஜீவனாம்சமே கொடுத்தாராம்
சென்னை: நடிகையை அனைத்து விதத்திலும் யூஸ் பண்ணிக்கொண்ட இயக்குநர்; நடிகையின் காசில்தான் தனது மனைவிக்கு ஜீவனாம்சமே கொடுத்தாராம்.
நடிகை தமிழ் சினிமாவில் ரொம்பவே ஃபேமஸ். அவரது கால்ஷீட்டுக்காக தவமாய் தவமிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும். ஆனால் இப்போதெல்லாம் அனைவருக்கும் கால்ஷீட்டை தூக்கி கொடுத்துவிடுவதில்லை நடிகை. மாறாக தனக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கிறதா? இதில் நடித்தால் பெயர் கிடைக்குமா என்பதை பார்த்து பார்த்துதான் கால்ஷீட்டை கொடுக்கிறார்.

கிளாமர் குயின்: திரைத்துறையில் நடிகை அறிமுகமானபோது கிளாமர் குயினாகத்தான் வலம் வந்தார். பாடல்கள், காட்சிகள் என அனைத்திலும் கவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கினார். அதன் காரணமாக நடிகைக்கான டிமாண்ட் கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு திரைப்பட துறைகளிலும் ஏறியது. சொல்லப்போனால் தமிழ் மொழியிலும் தெலுங்கு மொழியிலும் போட்டிப்போட்டு கவர்ச்சியை காண்பித்தார் நடிகை.
சர்ச்சை: உச்சக்கட்டமாக தமிழ் சினிமாவில் படு சூடான படுக்கையறை காட்சியிலும் முத்தக் காட்சியிலும் தைரியமாக நடித்தார். நடித்ததோடு மட்டுமின்றி அந்த நடிகரை காதலித்து தனியாக ஹோட்டல் ரூமிலும் விருந்து வைத்தாராம். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இரண்டு பேருக்குமான காதல் சில மாதங்களிலேயே முடிவடைந்தது. அது பெரிய விவாதம் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
தொடர் காதல்: நடிகருடனான காதல் முறிவுக்கு பிறகு சில வருடங்கள் யாருடனும் மிங்க்கிள் ஆகாமல் சிங்கிளாக இருந்தார் அம்மணி. நிலைமை இப்படி இருக்க வெப்பன் படத்தில் நடித்தபோது அந்த இயக்குநருடன் கொஞ்சம் நெருக்கம் காட்டினார் நடிகை. அந்த நெருக்கம் இருவருக்குள்ளும் நெருப்பை பற்ற வைக்க குட்டி போட்ட பூனையாக நடிகை பின்னாடி இயக்குநரும் இயக்குநர் பின்னாடி நடிகையும் சுற்றினார்கள்.
இதில் விஷயம் என்னவென்றால் இயக்குநர் ஏற்கனவே திருமணம் ஆனவர். நடிகைக்கும் இயக்குநருக்கும் இருந்த உறவு 90 சதவீதம் வெளியே தெரிந்த பிறகு இயக்குநரின் மனைவி நடிகையிடம் நேரடியாகவே சண்டைக்கு சென்றாராம். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத இருவரும் தொடர்ந்து உறவில் இருந்தார்கள். அந்த சமயத்தில் அனைத்து வழிகளிலும் இயக்குநர் அந்த நடிகையை பயன்படுத்திக்கொண்டாராம்.
ஒருகட்டத்தில் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என இயக்குநரிடம் நடிகை கேட்க ஆரம்பித்து பிறகு கெஞ்சவும் செய்தாராம். ஆனால் இயக்குநருக்கு திருமணம் செய்வதில் நாட்டம் இல்லையாம். இதற்கிடையே முதல் மனைவியும் விவாகரத்து கேட்க அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இயக்குநர் நடிகையிடம் நாம் திருமணம் செய்துகொள்ளலாம். இந்த விவாகரத்து விவகாரம் எல்லாம் முடியட்டும் என்று சொல்லி தள்ளிப்போட்டாராம்.
இதனை நம்பிய நடிகை அதை உடனே முடிக்க என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என சொல்ல; ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என இயக்குநர் சொன்னாராம். உடனே யோசிக்காத நடிகை அதுவரை தான் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த தொகையில் பெரும் தொகையை கொடுத்தாராம். அந்த காசை வாங்கி ஜீவனாம்சத்துக்கும் செட்டில் செய்தாராம் இயக்குநர். அதுமட்டுமின்றி நடிகையின் பணத்தில் சுகபோக வாழ்க்கையையும் வாழ்ந்தாராம்.
சூழல் இப்படி இருக்க அதான் எல்லாம் முடிந்துவிட்டதே திருமணம் செய்துகொள்ளலாம் என நடிகை கேட்க அதற்கு இயக்குநர் மழுப்பியிருக்கிறார். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்த நடிகை ஒரு சமயத்தில் இவர் பணத்துக்காகவும் மற்றதுக்காகவும்தான் பழகியிருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டு திருமணம் செய்துகொண்டால் இந்த உறவை தொடரலாம் இல்லை என்றால் பிரிந்துவிடலாம் என சொல்லி பிரிந்துவிட்டாராம்..


Click it and Unblock the Notifications











