டாப் நடிகர் செயலால் அரண்டுப் போன தயாரிப்பு நிறுவனம்.. ஆனால், அந்த இயக்குநர் செம அப்செட்டாம்!

By Staff

சென்னை: டாப் நடிகர் தயாரிப்பு நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் தனது படைப்பை வெளியிட்டு விட்டாரே என்கிற அப்செட்டில் இயக்குநர் செம கடுப்பாகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆரம்பத்தில் இருந்தே தன்னை நடிகரும் தயாரிப்பு நிறுவனமும் ஆட்டிப் படைத்து வருகிறது என கவலையில் இருந்த இயக்குநருக்கு படத்திற்கு நெகட்டிவிட்டியை பரப்பும் விதமாக இப்படியொரு வேலையை நடிகர் பார்த்து விட்டாரே என புலம்பி உள்ளாராம் இயக்குநர்.

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் போடும் அழுகாச்சி டிராமாவை அந்த நடிகர் தனது படத்தின் விளம்பரத்துக்காக செய்து வருவது இயக்குநருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

Director was very much upset over Top actor recent publicity stunt


இந்த முறையாவது ரசிகர்களின் அனுதாப ஓட்டுக்களை வாங்கி பெரிய வெற்றியை தேடிக் கொள்ள வேண்டும் என டாப் நடிகர் பார்த்த வேலை தான் இது என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் சினிமா வட்டாரத்திலேயே அடிபட்டு வருவது இயக்குநரை மனவேதனையில் ஆழ்த்தி இருப்பதாக கூறுகின்றனர்.

ஆடிப்போன தயாரிப்பாளர்: பல கோடியை கொட்டி வெளிநாட்டிலேயே பட்ஜெட்டால் பார்க்காமல் தண்ணி போல செலவு செய்து அந்த நடிகரை வைத்து படமெடுத்தால் எந்தவொரு அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனத்தை வெளியிட விடாமல் ரகசியம் காப்பாற்றுகிறேன் என தடுத்து வந்த டாப் நடிகர் திடீரென படத்தின் முக்கிய காட்சியையே வெளியிட்டதும் தயாரிப்பாளர் ஆடிப்போய் விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க: படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அறிவிப்பை ஒரு ட்வீட் போட்டு வெளியிட்டாலே ரசிகர்கள் சந்தோஷமடைவார்கள். இந்நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என இப்படியொரு வீடியோ போட்டது ஏன் என இயக்குநர் தனது உதவி இயக்குநர்களிடம் தனது கடுப்பை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

செம காண்டுல இயக்குநர்: அந்த வீடியோவை வெளியிட்டு தயாரிப்பு தரப்பை மிரட்ட நினைத்ததாக தற்போது விமர்சனங்கள் வெளியாகி வருவது படத்துக்கு நெகட்டிவாகவே மாறியுள்ளதாக கூறுகின்றனர். சினிமா பிரபலங்கள் யாருமே டாப் நடிகரின் ஸ்டன்ட்டை பார்த்து பாராட்டவில்லை என்றும் படத்தை இயக்குநர் எங்கே இருந்து உருவி எடுத்துள்ளார் என்பது அம்பலமான நிலையில், செம காண்டாகி விட்டார் இயக்குநர் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X