கணவர் நடத்தையில் டவுட்டு வந்துடுச்சு.. க்ளோஸா வாட்ச் பண்ணும் மனைவி.. இந்த நேரத்தில் கஷ்டம் தான்?

By Staff

சென்னை: சில பிரபலங்களை திருமணம் செய்து விவாகரத்து செய்துக் கொண்ட நடிகை கடைசியாக தன்னையே கதியென சுற்றி வந்த இயக்குநர் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்துக் கொண்டார். மனைவி நடிகை மட்டுமின்றி நடிகைகள் என்றாலே ஓவர் ஜொள்ளு விட்டு வரும் அந்த இயக்குநர் தற்போது இரண்டில் ஒன்றை பார்த்து விட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

கணவரின் நடத்தை சமீப காலமாக சரியில்லை என மனைவிக்கு பொறி தட்டியுள்ள நிலையில், கணவரை கண்காணிக்க ஒரு கண் வைத்து வருகிறார் என திடுக்கிட வைக்கின்றனர்.

Director wife got tensed over her husband recent closeness with few actress

மனைவி இருக்கும் போதே நடிகைகள் பக்கம் ஒதுங்கும் கணவர் அவர் இல்லாத நேரத்தில் என்ன என்ன சில்மிஷம் செய்திருப்பார் என மண்டை முழுவதும் நடிகைக்கு தற்போது கணவர் பற்றிய சந்தேகங்களே ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

ரசனைக்கார இயக்குநர்: நல்லா நடிக்கத் தெரியலைன்னா கூட பரவாயில்லை. கொஞ்சம் கலரா இருந்தா உடனே தனது படங்களில் புக் செய்து விட்டு கிடைக்குற கேப்பில் இட்லி துணியுடன் நடிகைகளை வலம் வர வைத்து விடுவார் அந்த ரசனைக்கார இயக்குநர். அவர் படத்தில் நடிக்கும் நடிகைகளிடம் அவர் இனிக்க இனிக்க பேசியே எக்ஸ்ட்ரா கவர்ச்சியை சம்பள காசுக்கே வாங்கி விடுவார் எனக் கூறுகின்றனர்.

லட்டு லட்டா நடிகைகள்: தனது படங்கள் சுமாராக இருந்தாலும், படத்தில் நடிக்கும் நடிகைகள் லட்டு லட்டாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே அந்த இயக்குநர் விரும்புவார் எனக் கூறுகின்றனர். மனைவியையும் அவர் அப்படித்தான் தேர்வு செய்து திருமணம் செய்துக் கொண்டார் என்பது தனிக்கதை.

நடிகைகள் மீது கண்: சமீப காலமாக இளம் நடிகைகள் மீது அந்த இயக்குநர் கண் வைத்திருக்கிறாரா? என்கிற சந்தேகம் மனைவி நடிகைக்கு எழுந்திருப்பதாக கூறுகின்றனர். நடிகைகள் பக்கத்தில் சிரித்துப் பேசும் கணவர் தான் அருகே வந்தால் மட்டும் அப்செட் ஆவது ஏன் என யோசித்து வருவதாகவும் கணவர் மீது ஒரு கண்ணை வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் எங்கே அந்த நடிகைகளுடன் கணவரை அனுப்பினாலும் கூடவே சென்று வருவதாக கூறுகின்றனர்.

சிக்கலான நேரம்: இன்னொரு பொறுப்பிலும் நடிகை ஈடுபட்டு வரும் நிலையில், அவரால் அதை கவனிப்பதா? கணவரை கவனிப்பதா? என்றே தெரியவில்லை என்றும் புலம்பித் தவித்து வருவதாக கூறுகின்றனர். அவருக்கு பதில் ரகசிய அசிஸ்டன்ட் ஒருவரை வைத்து கண்காணித்து வருகிறார் என்றும் கிசுகிசு கிளம்பி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X