அடக்கொடுமையே.. திடீரென பிட்டு சீனை போட்டுக் காட்டிய இயக்குநர்.. தெறித்து ஓடிய பிரியமான நடிகை?
சென்னை: சமீபத்தில் வெளியான அந்த மிருக படம் வெற்றியடைந்த நிலையில், அதே போல படங்களை இயக்கினால் தான் ஹிட் கொடுக்க முடியும் என இயக்குநர்கள் பலரும் வெறிபிடித்தவர்கள் போல மாறியிருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்தில் பிரபல டோலிவுட் இயக்குநர் படம் ஒன்றில் நடிக்க பிரியமான நடிகை ஆடிஷனுக்கு சென்று இருக்கிறார். அவரிடம் இயக்குநர் காட்டிய விஷயத்தை பார்த்து அவர் முடியாது என தெறித்து ஓடி வந்து விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
சினிமாவில் ஒரு விதமான படங்கள் வெற்றியடைந்தால் தயாரிப்பாளர்கள் உடனடியாக ஓடுகிற குதிரை மீது பணத்தைக் கட்டுறேன் என்கிற பெயரில் இயக்குநர்களை இந்த மாதிரி கதை இருந்தா சொல்லுங்க படம் பண்ணலாம் என கார்னர் செய்து விடுகின்றனர். இது மாதிரி என்ன இதை விட மோசமான படங்களையே கொடுக்க முடியும் என இயக்குநர்கள் எப்படியாவது படம் இயக்கும் வாய்ப்பை பெற முனைப்புக் காட்டி வருகின்றனர்.

சைக்கோ வாரம்: போலீஸ் படங்கள், கிரிக்கெட் படங்கள், ராஜா படங்கள், பேய் படங்கள், காமெடி படங்கள் என வரிசை கட்டி வரும் நிலையில், தற்போது சைக்கோத்தனமான ஹீரோக்கள் படங்களை தான் தயாரிப்பாளர்கள் தற்போது அதிகம் எதிர்பார்க்கின்றனர். மேலும், அந்த படங்களில் புதுமுக நடிகைகள் எல்லாம் போட்டால் ஓடாது என்றும் பிரபல நடிகர்களையும் நடிகைகளையும் கன்வின்ஸ் செய்து நடிக்க வைக்க வேண்டும் என்பதும் தயாரிப்பாளர்களின் ஆர்டராக உள்ளது.
மிருக படத்தைக் காட்டி: சமீபத்தில், தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்க பிரியமான நடிகை ஆடிஷனுக்கு சென்று இருக்கிறார். பொதுவாகவே அந்த நடிகையை அழைத்தாலே உடனே படங்களில் கமிட் செய்து விடுவார்கள். திடீரென நம்மை ஏன் ஆடிஷன் எல்லாம் பண்றாங்க என்கிற ஒருவித யோசனையுடன் சென்ற நடிகைக்கு இயக்குநர் பார்த்த வேலை ரொம்பவே ஷாக்கிங்காக அமைந்து விட்டதாம்.
பெரிய ஸ்க்ரீனில் பிட்டு சீன்: ஆடிஷனுக்கு சென்ற நடிகையிடம் பெரியளவில் இந்த படத்தை பண்ணப் போகிறோம். பெரிய ஹீரோவுடன் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. ஹீரோவை விட இந்த படத்தில் ஹீரோயின் தான் ரொம்பவே போல்டாக நடிக்க வேண்டும். என்னுடைய கதைக்கு நீங்க ஆப்ட்டாக இருப்பிங்க என ஏகப்பட்ட பிட்டுகளை போட்டு திடீரென புரஜெக்டரை ஆன் செய்து மிருக படத்தில் இரண்டாவது ஹீரோயினும் ஹீரோவும் நடித்த கில்மா சீனை போட்டு விட்டாராம். இந்த மாதிரி ஒரு சீன் நம்ம படத்துல இருக்கு, உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க அக்ரீமென்ட் சைன் பண்ணிடலாம் என கழுத்துக்கு மேல் கத்தி வைப்பது போல கேட்க, திடீரென எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் அந்த காட்சியை நடிகையிடம் போட்டுக் காட்டிய இயக்குநரின் இன்டென்ஷனே சரியில்லை என நினைத்த நடிகை கொஞ்சம் யோசிச்சு சொல்றேன் என அங்கிருந்து தெறித்து ஓடி வந்து விட்டாராம்.
போனே எடுக்கல: அதன் பின்னர் தொடர்ந்து அந்த இயக்குநர் போன் செய்து நடிகையிடம் பேச முயற்சித்து வரும் நிலையில், நடிகை போனையே எடுக்கவில்லையாம். அவருக்கு பதில் வேற எந்த நடிகையை புக் பண்ணலாம் என்கிற குழப்பத்தில் இயக்குநர் இருக்கிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











