»   »  தல, தளபதியை மட்டும்தான் இயக்குவேன் – அடம் பிடித்து காத்திருக்கும் இயக்குனர்

தல, தளபதியை மட்டும்தான் இயக்குவேன் – அடம் பிடித்து காத்திருக்கும் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிக இளம் வயதில் இரண்டாவது படத்திலேயே தளபதியையே இயக்கியவர் அவர். படம் ரிலீஸாகி 5 மாதங்கள் ஆகிறது. இன்னும் அடுத்த படத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை.

தளபதியை இயக்கியாச்சு. அடுத்து தல தான்... இல்லேன்னா தளபதியையே மீண்டும் இயக்குவேன். மற்ற ஹீரோக்கள் வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கிறாராம். இயக்குநரின் தந்தைதான் தல நடிகருக்கு ஆடிட்டர். அந்த நட்பில் கதை சொல்ல அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டிருக்கிறார். இன்னும் கிடைக்கவில்லை.

டைகர் தயாரிப்பாளர் தளபதியிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டிருப்பதை அறிந்து அந்த பக்கம் தூண்டில் போட்டிருக்கிறார். அவர் முந்தைய படத்தில் பட்ட பாடே போதும்... என இயக்குநரை கழட்டி விட்டாராம்.

கால்ஷீட்டுக்காக காத்திருப்போம் என்று அடுத்தடுத்து தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்ட மலையாள வாரிசு நடிகரை தன் கம்பெனி படத்தில் ஹீரோவாக்கி விட்டாராம்.

English summary
That young director who got a chance to direct Thalapathy in his second movie is adamantly waiting to direct the same actor again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil