2 மணி நேரத்துக்கு மேல நடிக்க முடியாது.. பேபி நடிகை போடும் கண்டிஷன்.. கம்பி நீட்டும் இயக்குநர்கள்?
சென்னை: முன்பெல்லாம் பேபி நடிகை டபுள் கால்ஷீட் எல்லாம் நடித்துக் கொடுக்கும் அளவுக்கு சினிமாவே உயிர் என வாழ்ந்து வந்தார். ஆனால், சமீப காலமாக அவரால் 2 மணி நேரத்துக்கு மேல் நடிக்க முடியாது என்கிற சூழல் உருவாகியிருப்பதாகவும் அதனால் தான் அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் இருப்பதாகவும் ஷாக்கிங் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
8 மணி நேரத்துக்கு குறைவாக நடிக்கும் நடிகர்களை படங்களில் பெரிதும் கமிட் செய்வதில்லை என இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒரு முடிவுடன் உள்ளனர். பல வளர்ந்து வரும் நடிகர்கள் காலையில் ஒரு படத்திலும் இரவு நேரம் இன்னொரு படத்திலும் என பல ஊர்களுக்கு பறந்து பறந்து சென்று நடித்து வருகின்றனர்.

ஆனால், ஒரு சில நடிகைகள் 6 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருவது மற்றும் சீக்கிரமே கிளம்பி செல்வது என குடைச்சல்கள் கொடுப்பார்கள். கொஞ்ச காலத்தில் மார்க்கெட்டை இழந்து ஆன்ட்டி நடிகைகளாகவும் சீரியல் பக்கம் ஒதுங்குவதும் அந்த நடிகைகள் தான் என்றும் அந்த வரிசையில் கூட பேபி நடிகை வரமாட்டார் என்றும் கூறுகின்றனர்.
ரெஸ்ட் எடுத்து டயர்ட்டாகி: சில மாதங்கள் ரெஸ்ட் எடுத்து பார்த்த பின்னர் தொடர்ந்து நடிக்க முடியும் என நினைத்த நடிகைக்கு இன்னமும் அவரது உடல் பல மணி நேரங்கள் வெளிச்சத்திற்கு முன்பாக நின்று நடிக்க ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்கின்றனர். விளம்பரப் படங்களில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே கால்ஷீட் ஒதுக்கி சட்டென நடித்து முடித்து அசத்தி விடுகிறாராம். ஆனால், அதே ஃபார்முலாவை சினிமாவில் பண்ணலாம் என நடிகை நினைத்தாலும் அவரது முடிவுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் குறிப்பாக ஹீரோக்கள் சம்மதமே தெரிவிக்கவில்லை என்கின்றனர்.
வேலைக்கே ஆகாது: நடிகையின் நடிப்பு பிடித்துப் போய் சில இயக்குநர்கள் நடிகையை புக் செய்ய அணுகிய நிலையில், 2 மணி நேரம் மட்டுமே நடிப்பேன். அதற்கு ஓகே என்றால் படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன். ஒரு நாள் முழுவதும் நடிக்க வேண்டிய நடிப்பை 2 மணி நேரத்தில் என்னால் கொடுக்க முடியும் நம்புங்க என நடிகை சொன்னாலும், அதெல்லாம் வேலைக்கே ஆகாது என படக்குழு மறுத்து கம்பியை நீட்டி வருவதாக கூறுகின்றனர்.
பல்வேறு முயற்சிகள்: எப்படியாவது நீண்ட நேரம் செட்டில் மேக்கப் போட்டுக் கொண்டு எந்தவொரு பிரச்சனையும் இல்லாத அளவுக்கு நடித்து விட வேண்டும் என்பதற்காக நடிகையும் பல சிகிச்சைகளையும் முயற்சிகளையும் எடுத்து வருகிறாராம். கூடிய சீக்கிரமே அவரது புதிய புராஜெக்ட் ஆரம்பமாகும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











