கடனில் கவுந்தடிச்ச ஹீரோ.. தண்டமா அகலகால் வச்சு இப்போ அமைதியோ அமைதி மோடுக்கு போயிட்டாராம்?

By Staff

சென்னை: விவாகரத்து சர்ச்சையில் இருந்து தன்னை திசை திருப்ப பல வேலைகளில் ஆர்வம் செலுத்திய அந்த பிரபல ஹீரோவுக்கு தற்போது கழுத்துக்கு மேல கடன் வந்துவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஹீரோவை நம்பி களத்தில் இறங்கிய பல நடிகர்களுக்கு சம்பளம் கூட தரவில்லையாம்.

மனைவியை விட்டுப் பிரிந்த நடிகர் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தொடர்ந்து படங்களாக கொடுக்கப்போவதாக அறிவித்தார். ஆனால், அவர் நடித்த எந்தவொரு படமும் இப்போதைக்கு வெளியாகாத சூழல் உருவாகி உள்ளது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Divorce Actor struck with heavy debt gossips turns talk of the town
Photo Credit:

நடிகருக்கு ஏற்பட்ட புதிய பழக்கத்தின் பேச்சைக் கேட்டு அகல கால் வைத்த நிலையில் தான் தற்போது அழுது புலம்பி வருகிறார் என்றும் துணையாக நம்பி வந்த நடிகர்களையும் அவர் நட்டாற்றில் விட்டு விட்டார் என கோடம்பாக்கம் முழுக்கவே கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

கடனில் கதாநாயகன்: படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் ஹீரோக்கள் கேட்ட பெரிய சம்பளத்தை மொத்தமாக கொடுக்க முடியாமல் சில தயாரிப்பாளர்கள் நஷ்டக் கணக்கை காட்டி பாதி சம்பளம் மட்டுமே தருகின்றனர் என்கிற சர்ச்சை வெடித்த நிலையில் தான் சமீப காலமாக பல நடிகர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தாங்களே மொத்த லாபத்தையும் பார்க்கலாம் என நினைத்தனர். ஆனால், அந்த கடலில் கால் வைத்த பின்னர் தான் அதில் மொத்தமும் முதலைகள் இருப்பது தெரியவும் புரியவும் வருகிறது. அப்படித்தான் அந்த ஹீரோவும் கெத்தா மாஸா உள்ளே கால் விட்டு இப்போ கடனில் மூழ்கிவிட்டார் என்கின்றனர்.

அப்செட்டான நடிகர்கள்: நடிகரை நம்பி அவரது தயாரிப்பில் நடிக்க வந்த சில நடிகர்கள் கடந்த சில நாட்களாக நடிகரே போன் செய்தாலும் கூட எடுக்கக் கூட மனமில்லாத நிலைக்கு சென்றுவிட்டனர் என்கின்றனர். இந்த நடிகரை நம்பி பல பட வாய்ப்புகளையும் பெரிய சம்பளத்தையும் விட்டு விட்டு நடிக்க வந்தால், நடிகரின் கடன் பிரச்னை காரணமாக இதுவரை அட்வான்ஸ் பணத்தை தவிர வேறு எந்த வருமானமும் வரவில்லை என்கின்றனர்.

சீக்கிரமே ஷட்டவுன்: மனைவியின் சாபம் வெப்பன் போல தாக்குகிறதா என்று தெரியவில்லை என்கிற பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. கூடிய சீக்கிரமே நடிகர் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் கையில் இருக்கும் படங்களை கெளரவத்துக்காக கடன் வாங்கியாவது எடுத்து ரிலீஸ் செய்யலாம் என நினைத்தாலும் நடிகரை நம்பி பைனான்ஸ் பண்ண யாருமே ரெடியில்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X