ஒரு பைசா கூட தரக்கூடாது.. நடிகரின் முதலை கண்ணீர் டிராமா.. எல்லாமே சீக்கிரமே முடிவுக்கு வருமாம்!
சென்னை: பெரிய தொகையாக நடிகரிடம் இருந்து பிட்டு போட நினைத்த மாஜிக்கு ஒரு ரூபாய் கூட தரக்கூடாது என்றும் இழுத்து அடித்துக் கொண்டே செல்லும் டைவர்ஸ் வழக்கை சீக்கிரமே முடித்து விட்டு தனது காதலியை கரம் பிடித்து செட்டில் ஆக வேண்டும் என்பதற்காகவே நடிகர் இப்படியொரு முதலை கண்ணீர் டிராமா போட்டுள்ளார் என மாஜியின் தரப்பு சோஷியல் மீடியாவில் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.
நடிகர் செய்த அசிங்கத்துக்கு எல்லாம் என்னோட பெண் தான் பாதிக்கப்பட்டாள் என்றும் எங்க குடும்பத்துக்கு தான் அசிங்கம் என மாமியாரும் அடித்து ஆட ஆரம்பித்துள்ளார்.

மேலும், அவருக்கு சப்போர்ட்டாக உள்ள தோழி நடிகையும் இந்த விவகாரத்தில் நடிகருக்கு எதிராக தொடர்ந்து விளையாடி வருவதால் நடிகரின் பிளான் என்ன என்பது குறித்தும் அவர் என்ன முடிவெடுப்பார் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தான் கோடம்பாக்கத்தில் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
பெரிய தொகைக்கு பிட்டு: மகன்களை லாக் செய்த மாஜி தங்களை விட்டு விட்டு உல்லாசத்துக்காக வேறு பெண்ணை தேடிச் சென்ற நடிகரால் தன்னோட வாழ்க்கையே அழிஞ்சு போச்சுன்னு பெரிய தொகைக்கு பிட்டு போட்டு செக்மேட் வைத்து விட்டார். நடிகரிடம் இருக்கும் பணத்தை எல்லாம் மாஜிக்கே கொடுத்து விட்டால் எனக்கு ஒன்றுமே மிஞ்சாது என முடிவெடுத்த லவ்வர் கழட்டிவிட்டு பறந்துச் சென்று விட்டார் என்றும் இந்த பஞ்சாயத்தை முடித்தால் சேர்வது குறித்து பேசலாம் என்றும் சொல்லிவிட்டு போனதால் தான் நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.
ஒரு பைசா கூட தரமாட்டேன்: என்னையா பிளாக் மெயில் பண்றீங்க, நான் நடிச்சி சம்பாதித்து பணம் சம்பாதித்தால் தானே என்னிடம் இருந்து பெரிய தொகைக்கு பிட்டு போடுவீங்க. நான் நடிக்கவும் போறது இல்லை. சம்பாதிக்கவும் போறது இல்லை என வேறு மாதிரி பிளாக்மெயில் பண்ணவங்களுக்கு அதிரடி செக் வைக்கவே இப்படியொரு முதலை கண்ணீர் டிராமா போட்டு சிம்பதி அலையை தன் வசப்படுத்தியுள்ளார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. டைவர்ஸ் வாங்கிவிட்டால் நடிகர் பழையபடி பக்காவாக மாறிவிடுவார் என்றும் எல்லாமே பக்கா டிராமா என்றும் மாஜி தரப்பில் இருந்து பரப்பத் தொடங்கி உள்ளனர். உண்மை என்ன என்பது கூடிய சீக்கிரமே சோத்துக்குள் மறைக்கப்பட்ட பூசணிக்காய் போல வெளியே வரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications