Don't Miss!
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Sports
நெருக்கடியில் சிறப்பாக செயல்பட்டார்கள்.. அவர் ஒரு மேஜிசியன்.. சாதனை கேப்டன் ரோகித் பேட்டி
- News
இருளில் மூழ்கிய ஜேஎன்யு! பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படம் திரையிடுவதை தடுக்க மின்சாரம் துண்டிப்பு!
- Finance
அமெரிக்காவுக்குப் போட்டியாக இந்திய நிறுவனங்கள்.. ஊழியர்கள் தான் பாவம்..!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
டாக்டர் நடிகையின் கட்டுப்பாட்டில்..விவாகரத்தான நடிகர்..அதிர்ச்சியில் குடும்பம்!
சென்னை : விவாகரத்தான நடிகர் தற்போது டாக்டர் நடிகையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விவாகரத்தான இந்த நடிகர் நடித்த திரைப்படம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
அந்தபடத்தில் இவரின் நடிப்பை அனைவரும் பாராட்டும் அளவுக்கு மிகவும் பக்காவாக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தது
துணிவு படத்தில் விக்ரம் வேதா நடிகர்.. தூள் கிளப்பும் ஹாட் அப்டேட் வேற.. அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்!

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்
ஸ்டார் நடிகரின் மகளை திருமணம் செய்து கொண்ட இந்த நடிகருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தை பல கட்டங்களான நடைபெற்ற போதும் அதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது வரை இருவரும் சேர்ந்தது போல தெரியவில்லை.

பல விதமான வதந்திகள்
மனம் ஒத்த தம்பதிகளான இருந்த இவர்களின் பிரிவுக்கான காரணம் தெரியாததால், இவர் இருவர் குறித்தும் பல வதந்திகள் காட்டுத் தீ போல பரவின. பல வதந்திகள் பரவினாலும் இருவரும் எதை பற்றியும் கவலைப்படாமல் தங்களின் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஸ்டார் நடிகரின் மகளும் விவாகரத்தை பிரச்சனையை கிடப்பில் போட்டுவிட்டு தனது அடுத்த வேலையில் கவனத்தை திருப்பி விட்டார்.

டாக்டர் நடிகையின் கட்டுப்பாட்டில்
ஆனால், விவாகரத்தான நடிகர் தற்போது டாக்டர் நடிகையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வசூலை வாரிக்குவித்த ஒரு படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டாக்டர் நடிகை தற்போது டோலிவுட்டில் மாஸ் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்து ஏராளமான படங்களை கையில் வைத்து இருக்கிறார்.

குழப்பத்தில் குடும்பத்தினர்
டோலிவுட்டில் டாக்டர் நடிகைக்கு என்று தனி மரியாதை இருப்பதால், அவர் விவாகரத்தான நடிகரையும் தெலுங்கு பக்கம் இழுத்துள்ளார். இதனால், விவாகரத்தான நடிகர் அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர் நடிகை என்ன சொன்னாலும், அதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் உடனே ஒகே கூறி விடுவதாக கூறப்படுகிறது. இதனால், அந்த நடிகரின் குடும்பத்தினர் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.