Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அப்போ அது உண்மை தானா.. அவசர அவசரமாக அந்த நடிகர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட அதுதான் காரணமா?
சென்னை: குடும்பமே விவாகரத்துக்கு பெயர் போன நிலையில், அந்த நடிகர் இப்படி திடீரென அவசரப்பட்டதற்கு பின்னணியில் அப்படியொரு சீக்ரெட் மேட்டர் இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன.
ஏற்கனவே அந்த பிரபல நடிகை மீது நடிகருக்கு காதல் ஏற்பட்ட நிலையில் தான் வீட்டில் சண்டையே ஆரம்பித்ததாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், நடிகையின் அழுத்தம் காரணமாகவே சீக்கிரம் இந்த அறிவிப்பை வெளியிட நடிகர் முன் வந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
தனுஷின் “அசுரன்“ வெளியாகி 2 வருஷம் ஆச்சு… கொண்டாடும் ரசிகர்கள் !
விவாகரத்து குடும்பம்
அந்த நடிகர் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பமே பல முறை விவாகரத்து மேட்டரில் விழுந்த குடும்பம் தான் என்கிற தகவல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நடிகர் மட்டும் என்ன விதிவிலக்கா? அவரும் குடும்பத்தின் ஆணி வேரை அப்படியே ஃபாலோ செய்துள்ளார் என சிலர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனராம்.
நடிகை மீது பிரச்சனை
ஆனால், கதையையே திருப்பிப் போட்டு அந்த நடிகை சொல் பேச்சு கேட்கவில்லை என்றும் படு மோசமாக நடிக்க ஆரம்பித்து விட்டார் என்றும் ஒட்டுமொத்த பழியும் நடிகையின் தலை மீது விழுவது போல பக்காவாக மாற்றி விட்டனர் என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
நடிகையுடன் காதல்
ஏற்கனவே நடிகருக்கும் இளம் நடிகைக்கும் இடையே காதல் ஆரம்பித்துள்ளதாகவும் சீக்கிரமே இந்த விவகாரம் பெரிய பிரச்சனையை கிளப்பும் என பேசப்பட்ட நிலையில், தற்போது அதுதான் இந்த விவாகரத்து பிரச்சனைக்கு ஆணி வேர் என்று பகீர் கிளப்பும் ரகசியங்கள் கசிய ஆரம்பித்துள்ளன.
நடிகைக்கு விருப்பமில்லை
கணவருடன் என்ன தான் சண்டை ஏற்பட்டாலும், அவரை விட்டு பிரிய நடிகைக்கு மனமே இல்லை என்றும், நடிகர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் அவரும் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த விவாகரத்து முடிவால் ரொம்பவே மன உளைச்சலுக்கு நடிகை ஆளாகி உள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறி உள்ளனர்.
எதுவும் வேண்டாம்
நடிகைக்கு பல கோடிகள் செட்டில்மென்ட் பேசி நடிகரின் குடும்பம் கழட்டி விட நினைத்த நிலையிலும், காதல் கணவரை பிரிகிறோம் என்கிற வருத்தத்தில் எதுவும் வேண்டாம் என்றும் அந்த நடிகை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றனர்.
விரைவில் அந்த சேதி
விவாகரத்து செய்த நடிகர் அடுத்ததாக அந்த நடிகையுடன் சேர்ந்து படம் பண்ண போவதாகவும், விரைவில் அடுத்த விசேஷ செய்திகளும் வெளியாகப் போவதாக பக்கத்து மாநிலம் முழுக்க பரபரப்பு பேச்சுக்கள் எதிரொலித்து வருகின்றன.