கணவரை பிரிந்த பப்ளி நடிகை.. மீண்டும் பழைய காதலருக்கு தூண்டில்?.. அந்த நடிகர் உஷாராயிட்டாராம்

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் அந்த பப்ளி நடிகை. மாஸ் நடிகர் முதற்கொண்டு பெரும்பாலும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர்; நடிகர் ஒருவரை தீவிரமாக காதலித்தார். ஆனால் அக்காதல் பாதியில் முடிந்தது. அதனையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டிலான அம்மணி; இப்போது கணவரையும் பிரிந்திருக்கிறார். இந்நிலையில் பழைய காதலருக்கு தூண்டில் போட ஆரம்பித்திருக்கிறாராம்.

வடமாநிலத்தை சேர்ந்தவர் அந்த ஹனி நடிகை. தமிழ் ரசிகர்கள் விருப்பப்படி பப்ளியான உடலோடு திரைத்துறையில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே உயர்ந்தவர். பப்ளி உடல், வெள்ளை நிறம், க்யூட் ரியாக்‌ஷன் ஒரு நடிகைக்கு தேவையான அத்தனையையும் கொண்டிருந்த அவர்; திறமையும் வாய்ந்தவர்தான். நடனம், நடிப்பு என அத்தனை ஏரியாக்களிலும் ஜொலித்த அவர்; டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக ஆரம்பித்தார். அவர் நடித்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

நடிகருடன் காதல்: கிளாமர் ரோலில் எல்லாம் எந்த குறையும் இல்லாமல் நடித்த அம்மணிக்கு; நடிகர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே அந்த நடிகர் ஒரு காதல் தோல்வியில் மனம் வெம்பி இருந்தார். அப்படிப்பட்ட சூழலில் என்ட்ரி கொடுத்த நடிகை; நடிகரின் மனதை கவர்ந்ததை அடுத்து இரண்டு பேரும் காதலிக்க தொடங்கினார்கள். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக நாங்கள் வலம் வருவோம் என்று ஓபன் ஸ்டேட்மென்ட்டும் கொடுத்தார்கள்.

Divorce Rumours Around Top Actress Reconnecting with Ex Sparks Fresh Gossip

திருமண ஏற்பாடு: தனது மகன் திருமணமே செய்துகொள்ளமாட்டானா என்று நடிகரின் குடும்பத்துக்கு நடிகர் காதல் செய்த விவகாரம் பெரிய நிம்மதியை கொடுத்தது. நடிகையின் வீட்டில் பேசி திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை; நடிகரும், நடிகையும் தங்களது காதலை பிரேக் அப் செய்துவிட்டார்கள். அது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

திருமணம் செய்துகொண்ட நடிகை: நடிகரை பிரிந்த நடிகை சில காலம் சிங்கிளாக இருந்தார். காலப்போக்கில் அவர் இன்னொருவரை காதலிக்க ஆரம்பித்தார். இந்தக் காதலை திருமணம் வரை கொண்டு செல்வது என முடிவெடுத்து அதன்படியே நடத்தியும் காட்டினார். ஆனால் நடிகை திருமணம் செய்தவர்; ஏற்கனவே விவாகரத்து ஆனவர். கடந்த காலத்தை பார்ப்பதில் அர்த்தமில்லை என்றுதான் அவரை திருமணம் செய்துகொண்டார்.

விவாகரத்து செய்யும் நடிகை?: ஆனால் திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லையாம். இரண்டு பேருக்கும் பிரச்னை பூதாகரமாக வெடித்துவிட்டதாகவும்; விரைவில் விவாகரத்து பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்று தெரிகிறது. சூழல் இப்படி இருக்க திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்திருக்கும் நடிகை; பழைய காதலருக்கு ஃபோன், மெசேஜ் செய்ய ஆரம்பித்திருக்கிராராம். முன்னாள் காதலி என்பதால் நடிகரும் ரெஸ்பான்ஸ் செய்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் மீண்டும் நாம் பேட்ச் அப் ஆனால் என்னவென்று நடிகை கேட்க; சுதாரித்துக்கொண்ட நடிகரோ, 'அந்த ஐடியா எல்லாம் எனக்கு இல்லை. வேண்டுமென்றால் நட்போடு பழகலாம்' என சொல்லிவிட்டாராம். இதனால் நடிகை கொஞ்சம் அப்செட் ஆனாலும் போகப்போக நடிகரின் மனதை மாற்றிவிடலாம் என்ற தைரியத்தில் இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X