அந்த இயக்குநரை விட இந்த விவாகரத்தான நடிகருக்குத்தான் ஓவர் கடன் இருக்காம்.. சிக்கினா டோக்கன் தான்!
சென்னை: ஒல்லி நடிகர் வரிசையாக ஒரு டஜன் படங்களில் கமிட் ஆகி தொடர்ந்து ஏகப்பட்ட தயாரிப்பாளர்களிடம் ஸ்டேட் விட்டு ஸ்டேட் மாறிச் சென்று படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸ்களாக அள்ளிப் போட்டு வர முக்கிய காரணமே அவருக்கு தலைக்கு மேல இருக்கும் ஓவர் கடன் தான் எனக் கூறுகின்றனர்.
வெற்றிப் படங்களை கொடுக்கும் இயக்குநர்களை தம்பி வாங்க பாராட்டுறேன்னு தனக்கும் ஒரு கதையை ரெடி பண்ண சொல்லி, உடனடியாக ஒரு தயாரிப்பாளர் தலையையும் தடவி அட்வான்ஸை வாங்கி வைத்துக் கொள்ளும் வேலையை பார்த்து வருகிறாராம்.

மற்ற நடிகர்கள் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை தேடி பிடிப்பதற்குள் மூச்சு வாங்கி வரும் நிலையில், திடீரென இந்த நடிகருக்கு மட்டும் எப்படி இத்தனை பட வாய்ப்புகள் கிடைக்கின்றன என்கிற சந்தேகமும் சினிமா வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
விவாகரத்துக்குப் பிறகான மாற்றம்: இதற்கு முன்பெல்லாம் நடிகர் இத்தனை ஆண்டுகளாக இப்படி இருந்ததே கிடையாது என்கின்றனர். ஒரு படத்தை முடித்து விட்டு இன்னொரு படத்தில் நடிப்பார் என்றும் படத்துக்குப் படம் கெட்டப் உள்பட ஏகப்பட்ட மாறுதல்களை செய்து தான் நடித்து வருவார். ஆனால், இப்போ அவர் தனது ரூட்டை மொத்தமாக மாற்ற காரணமே விவாகரத்துக்குப் பிறகு அவர் வாங்கிய பலமான அடி தான் என்கின்றனர்.
ஓவர் கடன் உடம்புக்கு ஆகாது: தயாரிப்பாளராக மாறி ஒரு சிலரை வளர்த்து விட நினைத்தும் ஒரு சில இயக்குநர்களுக்கு நட்பு ரீதியாக படங்களில் நடித்துக் கொடுத்தும் தேவைக்கு அதிகமாக அதிக பொருட்செலவில் வீடு கட்டியது என அகல கால் வைத்த நிலையில், எசகு பிசகாக சிக்கிக் கொண்டாராம் அந்த ஒல்லி நடிகர் என்கின்றனர். தன்னுடைய திறமையை வைத்து எப்படி இருந்தாலும் இதில் இருந்து மீண்டு விட முடியும் என்பதால் தான் இப்படி ஓடோடி ஓடாய் தேய்ந்து நடித்து வருகிறார் என்கின்றனர்.
கைவசம் 10 படங்கள்: அந்த அவார்டு இயக்குநருடன் ஒரு படத்தில் சிக்கிக் கொண்டாலே பல வருடங்கள் மனுஷன் வச்சு செய்து விடுவார். ஆனால், அவருடைய படத்திலும் கமிட் ஆகி இன்னமும் கைவசம் 10 படங்களை அட்வான்ஸ் புக்கிங்கில் வைத்துக் கொண்டு ஒல்லி நடிகர் பலே வேலை பார்த்து வருகிறார் என்றும் ஆரம்பத்தில் நடிகரை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் கால்ஷீட் பிரச்னை வரும் போதுதான் நடிகரின் சுயரூபத்தை பார்ப்பார்கள் என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.
வெளியூரிலும் வெள்ளை அடிக்கிறாரு: உள்ளூரில் முடிந்த வரை தயாரிப்பாளர்களிடம் ஒரு பெத்த அமவுண்ட்டை ஆட்டையைப் போட்ட ஒல்லி நடிகர் வெளியூரிலும் ஏப்ப சாப்பையான ஆட்களை பார்த்து நான் இருக்கேன் நம்பி வாங்க என வெளியூரிலும் வெள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டாராம். 'பி' நடிகரை வைத்து பொம்மை படம் எடுத்து ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன இயக்குநரையும் பூஸ்டப் செய்து தனக்கான மீட்டரை மொத்தமாக கறந்து விட்டார் என்றும் நடிகர் கைவசம் இருக்கும் படங்கள் எல்லாம் ரெடியாகி வர இன்னமும் 10 வருடங்கள் ஆகுமா? பாவம் எத்தனை இயக்குநர்கள் இவருக்காக காத்திருந்து காத்திருந்து காலத்தை வீணடிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லையே என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











