அடுத்த திருமணத்துக்கு ரெடியான நடிகை.. பெரிய தயாரிப்பாளர் விரித்த வலையில் சிக்கிட்டாராம்!
சென்னை: சில சினிமா நடிகைகள் முதல் திருமணத்தை நடிகர்களுடனும் இரண்டாவது திருமணத்தை இயக்குநர்கள் அல்லது தயாரிப்பாளர்களுடன் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டு உயிருக்கு உயிராக காதலித்த நடிகரை பிரிந்த நிலையில், அடுத்த திருமணத்துக்கு நடிகை ரெடியாகி விட்டாராம்.
அதுவும் ஒரு பெரிய தயாரிப்பாளர் உடன் விரைவில் தனது திருமணத்தை நடிகை அறிவிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர்களுடன் காதல்
ஏற்கனவே ஒரு சில நடிகர்களை காதலித்து பல இடங்களில் சுற்றித் திரிந்த அந்த நடிகையின் பின்னால் பித்துப் பிடித்தது போல பிரபல நடிகர் ஒருவர் அலைந்து திரிந்ததை பார்த்த நடிகை ஆடு வசமாக வந்து தலையை கொடுக்கிறது என ஓகே சொல்லி விட்டார். ஆனால், திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாதுன்னு சொல்லக் கூடாது, குழந்தை பெத்துக்கணும்னு டார்ச்சர் பண்ணக் கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்களை அடுக்க அந்த நடிகரும் நடிகை கிடைத்தால் போதும் என அத்தனைக்கும் தலையாட்டி திருமணம் செய்து கொண்டார்.

வீட்டில் டார்ச்சர்
ஆனால், வீட்டில் எத்தனை ஆண்டுக்குத் தான் பெற்றோர்கள் சும்மா இருப்பார்கள் மகனிடம் சொல்லி பார்த்தும் அவன் தைரியமாக சென்று கேட்பது இல்லை என அறிந்து கொண்ட மாமியார் நேரடியாக மருமகளிடமே பிரஷர் கொடுத்தது தான் அதிரடியாக இருவரும் பிரிவதற்கு காரணம் என்றே பேசப்பட்டு வருகிறது.

ஃப்ரீ பேர்ட்
கூண்டுக் கிளியாக இருக்க முடியாது, ஐ எம் எ ஃப்ரீ பேர்ட் என நடிகை விவாகரத்தை மூஞ்சியிலேயே தூக்கி அடித்து விட்டு ஜாலியாக தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தனியாக இருக்கும் நடிகைக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கொக்கிப் போட்டு வரும் நிலையில், சரியான இழிச்சவாயனாக தான் சொல்வதை கேட்கும் நபராக தேடிக் கொண்டிருந்த நடிகைக்கு இன்னொரு சூப்பரான கெடா ஆடு கிடைத்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டாவது திருமணத்துக்கு ரெடி
பிரபல தயாரிப்பாளர் நடிகையின் அத்தனை கண்டிஷனுக்கும் ஓகே சொல்லியுள்ள நிலையில், நடிகையும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து அவருடன் ரகசிய டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய விரைவிலேயே எல்லாம் ஓகே ஆனால், நடிகைக்கு அவர் செட்டானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பையே அறிவிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

சிக்னல் கொடுக்கும் நடிகை
உடனடியாக இந்த விஷயம் வெளியே வந்தால் தனது சினிமா மார்க்கெட் பாதிக்கும் என்பதால், மறைமுகமாக தனது இரண்டாவது திருமணம் பற்றிய தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக அந்த நடிகையே கசியவிட்டு வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. புதிய காதலர் சொன்னதை கேட்டுத் தான் சமூக வலைதளங்களில் பெரிதாக சத்தம் காட்டாமல் நடிகை அமைதியாக உள்ளார் என்றும் பக்கத்து ஸ்டேட்டில் பரவலாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











