நடிகையை வளைத்துப் போட்ட நடிகர்.. எப்படி தெரியுமா?.. எல்லாத்துக்கும் காரணம் அந்த விஷயமாம்
சென்னை: இந்திய அளவில் சிறப்பான நடிகர் என்று பெயர் எடுத்தவர் அவர். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தேசிய விருதையும் அள்ளியிருக்கிறார். திருமணமாகி ஏற்பட்ட பிரச்னையில் விவாகரத்து செய்திருக்கும் அவர்; இப்போது வேறு ஒரு நடிகையுடன் நெருக்கம் காட்டிவருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் அந்தக் காதல் எப்படி உருவானது என திரைத்துறையில் பேச்சுக்கள் அதிகம் எழுந்திருக்கின்றன.
சுமாரான உருவம் சினிமா ஹீரோவுக்குரிய எந்த லட்சணமும் இல்லை என்பதுதான் அந்த நடிகர் சினிமாவில் அறிமுகமாகும்போது பலரும் பேசியது. அவர் அதையெல்லாம் காதுகளில் பெரிதாக போட்டுக்கொள்ளாமல் தனது திறமையை மட்டும் வளர்த்தார். அதற்கு கூலியாக பல பட வாய்ப்புகள் கொட்டி கிடைத்தன. வாய்ப்புகள் மட்டுமின்றி பிரபலமான நடிகர் வீட்டு பெண்ணும் மனைவியாக கிடைத்தார். அப்போதிருந்து நடிகருடைய வாழ்க்கை டாப் கியரில் சென்றது.
இந்திய அளவில் பிரபலம்: திருமணத்துக்கு பிறகு நடிகர் மொத்தமாகவே மாறினார். நடை, உடை, பாவனை, பேச்சு என அத்தனையிலும் அதுவரை இல்லாத மேட்டுக்குடித்தனம் குடியேறிக்கொண்டது. அதற்கு காரணம் அந்த நடிகரின் மனைவிதான். அதேபோல் மனைவிக்கு ஒன்று என்றாலும் இந்த கணவர் நடிகர் துடிதுடித்துப்போனார். காதலுக்கு அடையாளமாக மகன்களையும் பெற்றெடுத்தார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் இடி விழுந்ததுபோல் விவாகரத்து ஏற்பட்டது.

நடிகையுடன் டேட்டிங்: மனைவியை பிரிந்த நடிகர் சிங்கிளாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக கொலுக் மொலுக் நடிகையுடன் நடிகருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டதாம். அதுமட்டுமின்றி மும்முரமாக இரண்டு பேரும் டேட்டிங் செய்து ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டார்களாம். இனிமேல் இந்த உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லலாம் என முடிவெடுத்து வீட்டிலும் பேசியிருக்கிறார்கள்.
திருமண சேதி: நடிகர் தனது வீட்டில் சொன்னதும் அவர்களுக்கு டபுள் ஓகேயாம். ஏனெனில் தனது மகன் ஒண்டிக்கட்டையாக வாழ்க்கையை ஓட்டிவிடக்கூடாது என அவரது தந்தை ரொம்பவே வேதனையில் இருந்தாராம். இப்போது மகன் இப்படி ஒரு செய்தியை சொன்னதும் உடனே உறவினர்களுடன் சென்று நடிகையின் வீட்டில் பேசினாராம். அதற்கு நடிகையின் வீடும் சம்மதம் தெரிவிக்க; இன்னும் கொஞ்ச காலத்தில் திருமண செய்தி அதிகாரப்பூர்வமாக வரலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
எப்படி வந்தது காதல்?: இந்நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கும் எப்படி காதல் வந்தது என்பது பற்றி கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கின்றன. அதாவது, இந்த நடிகர் முழுக்க முழுக்க பாலிவுட்டில் கவனம் செலுத்த மும்பை சென்றார். நடிகை ஏற்கனவே அங்கேதான் தங்கியிருந்திருக்கிறார். ஒரு பார்ட்டியில் இரண்டு பேரும் கலந்துகொண்டு முழுவதுமாக குடித்துவிட்டு நடனம், பேச்சு என்று இருந்திருக்கிறார்கள். அந்த இரவில் இரண்டு பேருக்கும் இடையேயான வேவ் லெங்த் ஒத்துப்போக மறு நாளிருந்தே டேட்டிங்கை ஆரம்பித்து ஒரு ப்ளாட்டில் இருக்கும் நிலைமைக்கு சென்றுவிட்டார்களாம். எல்லாத்துக்கும் காரணம் அந்தப் பார்ட்டிதானாம்.


Click it and Unblock the Notifications











