மீண்டும் ஒல்லி நடிகருடன் ஒட்டப் பார்க்கும் மில்க் நடிகை.. சம்மதிப்பாரா சமஸ்தானம்!
சென்னை: ஒல்லி நடிகருடன் மீண்டும் ஒட்டப் பார்க்கிறார் அந்த மில்க் நடிகை என்கிற ஹாட் டாபிக் கோலிவுட்டில் தற்போது சூடு பிடித்துள்ளது.
மனைவியை பிரிந்து தனியாக வசித்து வரும் ஒல்லி நடிகர் சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பினாலும், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த பீரியட் படத்தில் பின்னி பெடலெடுத்து நடித்து வரும் நடிகருக்கு சமீபத்தில் மில்க் நடிகை போன் செய்து பேசியதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
இருவருக்கும் இடையே ஏற்கனவே தாறுமாறாக கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆன நிலையில், நடிகருக்கு அந்த நடிகை கொக்கிப் போட்டுள்ளாராம்.

கணவரை பிரிந்த மில்க் நடிகை: டாப் ஹீரோயினாக வலம் வந்த அந்த மில்க் நடிகையை அந்த பிரபல இயக்குநர் காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். ஆனால், திருமணம் ஆன கொஞ்ச நாளிலேயே இருவருக்கும் இடையே வாய்க்கா தகராறு முட்டிக் கொண்டது.
நடிகைக்கு ஏகப்பட்ட இடங்களில் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாக இயக்குநர் காதுபடவே பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், நடிகையை விவாகரத்து செய்து பிரிந்தார்.
ஒல்லி நடிகர் தான் காரணமா? நடிகையும் அவரது கணவரும் பிரிய காரணமே அந்த ஒல்லி நடிகர் தான் என வெளிப்படையான பேச்சுக்கள் அடிபட்டன. நடிகையின் மாமானாரும் இந்த விவகாரத்தில் பெரும் பஞ்சாயத்தை கிளப்பி இருந்தார்.
மில்க் நடிகையும் ஒல்லி நடிகரும் தொடர்ந்து ஒரு சில படங்களில் இணைந்து மிகவும் நெருக்கமாக நடித்த நிலையில், இப்படியொரு பஞ்சாயத்து அந்த நடிகையின் குடும்பத்தில் பூகம்பத்தையே உண்டாக்கியது என்றனர்.
சாமியார் வேஷம்: சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்ட அந்த நடிகை நாடு முழுவதும் பல கோயில்களுக்கும் ஆசிரமங்களுக்கும் சென்று வந்த நிலையில், வெளிநாடுகளிலும் சாமியார் வேஷம் போட்டு சுற்றி வருகிறார்.
ஆனாலும், அடிக்கடி பிகினி உடைகளை அணிந்து கொண்டும் ஆண் நண்பர்களுடன் சரக்கு பார்ட்டிகளில் எல்லை மீறியும் வருகிறார். இந்நிலையில், மீண்டும் அந்த ஒல்லி நடிகருடன் ஒட்டிக் கொள்ள திட்டம் போட்டு வருகிறார் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

ஒல்லி நடிகருடன் ஒட்டிக்கொள்ள திட்டம்: சினிமா வாய்ப்புகள் குவிந்த நிலையில், சாமியராக சுற்றி வரும் நடிகை மீண்டும் சினிமாவில் நடிக்க அவருடன் இணைந்து நடித்த நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் அந்த ஒல்லி நடிகருக்கு போன் செய்த மில்க் நடிகை மீண்டும் அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என கேட்டுள்ளாராம். ஆனால், நடிகர் இப்போதைக்கு இருக்கும் ரேஞ்சில் மீண்டும் அந்த நடிகையுடன் இணைந்து நடிக்கலாமா? வேண்டாமா? என ஆலோசித்து வருகிறாராம். விரைவில் நல்ல சேதி சொல்றேன் என சொல்லிட்டு போனை கட் செய்து விட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











