தேவதையை காணவில்லை! தக தக பாப்பா தியாவை கொஞ்ச நாளாக எங்கேயும் பார்க்க முடியவில்லை. தீ மாதிரி கோலிவுட்டில் அறிமுகமானவர் தியா. சடசடவென நிறையப் படங்களில்நடிப்பார் என்று எதிர்பார்த்தால், தட்டுத்தடுமாறித்தான் கோலிவுட்டை சுற்றி வந்தார்தியா.இடையிடையே காணாமல் போனாலும் கூட, எங்காத்துக்காரரும் கச்சேரிக்குபோய்ட்டு வர்றார் என்பது போல தியா நடித்த படங்களும் அவ்வப்போது வந்துபோய்க் கொண்டிருந்தன.இடையே டிவி விளம்பரங்கள், ஒரு விளம்பர நிறுவனத்தின் மேஜேனருடன் காதல்,அவரது பைனான்சில் தியாவே படம் தயாரிக்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சுஎழுந்தது. ஆனால், இந்த காதலை பிரஸ்மீட் வைத்து மறுத்தார் தியா.சமீபத்தில் தியா நடித்த கோடம்பாக்கம் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. அதன் பிறகு சில புதிய பட வாய்ப்புகள் தியாவுக்கு வந்தன. அதில் செவன்என்ற படத்தில் ஒப்புக்கொண்டு நடித்து வந்தார்.இப்படத்தில் விதம் விதமான 7 கெட்டப்களில் தியா நடித்து வந்தார். அதில் ஒரு ரோல்மாடலிங் செய்யும் பெண். இந்த சூட்டிங் அவ்வப்போது நடந்து வருகிறது. தொடர்ந்துநடக்கவில்லை.இந் நிலையில் சில நிாட்களாக தியாவுக்கும், வெளியுலகுக்கும் எந்தவிதமானதொடர்பும் இல்லையாம். வழக்கமாக போகும் அண்ணாநகர் ஜிம்முக்கும் அவர்வருவதில்லையாம். செல்போனையும் ஆஃப் செய்து வைத்துள்ளாராம்.யாருக்கும் தியாவின் இருப்பிடம் தெரியவில்லையாம். சென்னையில்தான்இருக்கிறாரா, அல்லது வெளிநாட்டுக்கு பறந்து விட்டாரா என்று தெரியாமல்மண்டையை பிய்த்துக் கொண்டுள்ளனராம் அவருக்குத் தெரிந்தவர்கள்.தியா அடிக்கடி செல்போன் எண்ணை மாற்றி விடுபவர் என்பதால் புதிய எண்ணைவாங்கிவிட்டாரா என்றும் சிலர் குடைந்து கொண்டுள்ளனர்.தியாவின் தலைமறைவுக்கும், அவரது காதலுக்கும் ஏதாச்சும் டை-அப் இருக்கிறதாஎன்று தெரியவில்லை.தேவதையைக் காணவில்லை, சீக்கிரமா தேடி கண்டுபிடிங்கப்பா...

By Staff

தக தக பாப்பா தியாவை கொஞ்ச நாளாக எங்கேயும் பார்க்க முடியவில்லை.

தீ மாதிரி கோலிவுட்டில் அறிமுகமானவர் தியா. சடசடவென நிறையப் படங்களில்நடிப்பார் என்று எதிர்பார்த்தால், தட்டுத்தடுமாறித்தான் கோலிவுட்டை சுற்றி வந்தார்தியா.

இடையிடையே காணாமல் போனாலும் கூட, எங்காத்துக்காரரும் கச்சேரிக்குபோய்ட்டு வர்றார் என்பது போல தியா நடித்த படங்களும் அவ்வப்போது வந்துபோய்க் கொண்டிருந்தன.

இடையே டிவி விளம்பரங்கள், ஒரு விளம்பர நிறுவனத்தின் மேஜேனருடன் காதல்,அவரது பைனான்சில் தியாவே படம் தயாரிக்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சுஎழுந்தது. ஆனால், இந்த காதலை பிரஸ்மீட் வைத்து மறுத்தார் தியா.

சமீபத்தில் தியா நடித்த கோடம்பாக்கம் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. அதன் பிறகு சில புதிய பட வாய்ப்புகள் தியாவுக்கு வந்தன. அதில் செவன்என்ற படத்தில் ஒப்புக்கொண்டு நடித்து வந்தார்.

இப்படத்தில் விதம் விதமான 7 கெட்டப்களில் தியா நடித்து வந்தார். அதில் ஒரு ரோல்மாடலிங் செய்யும் பெண். இந்த சூட்டிங் அவ்வப்போது நடந்து வருகிறது. தொடர்ந்துநடக்கவில்லை.

இந் நிலையில் சில நிாட்களாக தியாவுக்கும், வெளியுலகுக்கும் எந்தவிதமானதொடர்பும் இல்லையாம். வழக்கமாக போகும் அண்ணாநகர் ஜிம்முக்கும் அவர்வருவதில்லையாம். செல்போனையும் ஆஃப் செய்து வைத்துள்ளாராம்.

யாருக்கும் தியாவின் இருப்பிடம் தெரியவில்லையாம். சென்னையில்தான்இருக்கிறாரா, அல்லது வெளிநாட்டுக்கு பறந்து விட்டாரா என்று தெரியாமல்மண்டையை பிய்த்துக் கொண்டுள்ளனராம் அவருக்குத் தெரிந்தவர்கள்.

தியா அடிக்கடி செல்போன் எண்ணை மாற்றி விடுபவர் என்பதால் புதிய எண்ணைவாங்கிவிட்டாரா என்றும் சிலர் குடைந்து கொண்டுள்ளனர்.

தியாவின் தலைமறைவுக்கும், அவரது காதலுக்கும் ஏதாச்சும் டை-அப் இருக்கிறதாஎன்று தெரியவில்லை.

தேவதையைக் காணவில்லை, சீக்கிரமா தேடி கண்டுபிடிங்கப்பா...

Read more about: where is actress diya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X