விரும்பி சர்ச்சையை தேடிப் போகிறாரா 'ஸ்டைல்' நடிகர்?
சென்னை: ஸ்டைல் நடிகர் விரும்பி சர்ச்சையை தேடிப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்டைல் நடிகர் சின்ன பையன் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். சின்ன பையன் கதையை சுட்ட விவகாரத்தில் சிக்கியபோது அவரின் படத்தில் நடிப்பதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தாராம் நடிகர்.
அதன் பிறகு வருவது வரட்டும் என்று துணிந்து முடிவு எடுத்துவிட்டார்.

சர்ச்சை
சின்ன பையன் இயக்கிய சமீபத்திய படம் பெரும் சர்ச்சையில் சிக்கியது. அதில் வந்த ஒரு காட்சிக்காக அவர் படாதபாடு பட்டுவிட்டார். இந்நிலையில் ஸ்டைல் நடிகரை வைத்து இயக்கும் படத்தில் அரசியல் பேசுகிறாராம். அந்த படத்திற்கு என்ன பிரச்சனை எல்லாம் வரப் போகுதோ தெரியவில்லை.

கட்சி
நடிகர் கட்சி துவங்க வேண்டிய நேரத்தில் அரசியல் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தால் சர்ச்சை எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனரால் பாதி சர்ச்சை ஏற்பட்டால், நடிகரால் மீதி ஏற்படும் எனலாம். நடிகருக்காகவே பிரச்சனையை கிளப்ப ஆட்கள் உள்ளனர்.

இயக்குனர்
இயக்குனர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குகிறார் என்று தெரிந்தும் அவர் படத்தில் நடிக்கிறார் ஸ்டைல் நடிகர். நம் படத்திற்கும் சர்ச்சையால் இலவச விளம்பரம் கிடைக்கட்டும் என்று ஆசைப்பட்டு அந்த இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பார்க்கலாம்
சின்ன பையன் இயக்குனர் ஸ்டைல் நடிகரை தனது படத்தில் முதல்வராக்குகிறாராம். நிஜத்தில் அவர் முதல்வராகவே கூடாது என்று கோஷமிடுபவர்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பார்கள். சின்னப் பையனுக்கு ராசி தான், இந்த படத்திற்கு பெரிய அளவில் இலவச விளம்பரம் கிடைக்கும் போன்று.


Click it and Unblock the Notifications











