»   »  ரூ.40 கோடி கடனை அடைத்த நடிகர்: அதுவும் கரெக்டா மோடியின் அறிவிப்புக்கு முன்

ரூ.40 கோடி கடனை அடைத்த நடிகர்: அதுவும் கரெக்டா மோடியின் அறிவிப்புக்கு முன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டின் இளம் நடிகர் ஒருவர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவிக்கவிருந்த நேரத்தில் ரூ. 40 கோடி கடனை அடைத்துள்ளார்.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார். மோடியின் அறிவிப்பு சில பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்ற பேச்சு உள்ளது.

இந்நிலையில் கோலிவுட்டின் இளம் நடிகர் ஒருவர் மோடியின் அறிவிப்பு வெளியாகவிருந்த நேரத்தில் பைனான்சியர் ஒருவரிடம் வாங்கிய ரூ.40 கோடி கடனை திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதனால் நடிகர் தப்பித்துவிட்டார். அவரிடம் இருந்து கடனை திரும்பப் பெற்ற பைனான்சியருக்கு தான் பல கோடி நஷ்டம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அது எப்படி நடிகர் மோடி அறிவிக்கும் முன்பு கரெக்டாக கடனை திருப்பிக் கொடுத்தார். அப்படி என்றால் அவருக்கு ஏற்கனவே மோடியின் அறிவிப்பு பற்றி தெரிந்திருக்குமோ என்று கோடம்பாக்கத்தில் பேச்சாக உள்ளது.

English summary
A young hero in Kollywood returned Rs. 40 crore loan exactly before PM Modi's surgical strike on black money.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil