இனிமே அவர் கூட படம் பண்ணாதீங்க.. அண்ணனிடம் தம்பிகள் ரெக்வஸ்ட்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த விளையாட்டு படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பி வரும் நிலையில், அந்த மாஸ் நடிகரின் ரசிகர்கள் நேரடியாகவே இனிமே அந்த இயக்குநருடன் படம் பண்ணாத

Recommended Video

நீல சட்டைக்கார விமர்சகர் கழுவி ஊற்றிய அந்த படம்

சென்னை: அதிக பட்ஜெட்டில் வெளியான அந்த விளையாட்டு படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பல தரப்பிலும் விமர்சனங்கள் வந்து குவிகின்றன.

இசை வெளியீட்டு விழாவில் கொடுத்த ஏகபோக பில்டப்பால், ஒரு வாரத்திற்கு படம் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளதாம்.

வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகள் அந்த அளவுக்கு இல்லை என்ற பேச்சே அடிபடுகிறது.

ஓவர் பில்டப்

ஓவர் பில்டப்

விளையாட்டு படம் என்ற ரீதியில் விளம்பரப்படுத்திவிட்டு, படத்தில் விளையாட்டு காட்சிகளுக்கான டீட்டெய்லிங் இல்லை என்ற குற்றச்சாட்டு பல தரப்பிலும் எழுந்துள்ளன. அதேபோல, கம்ப்யூட்டர் மாயாஜால காட்சிகள் எல்லாம், வீடியோ கேம் அளவிற்குத்தான் உள்ளது எனவும் அந்த நீல சட்டைக்கார விமர்சகர் உள்ளிட்ட பலரும் கழுவி ஊற்றியுள்ளனர்.

பாராட்டு

பாராட்டு

மூன்று எழுத்து இயக்குநரின் பிளஸ் பாய்ன்ட்டான அழ வைக்கும் காட்சிகள், இந்த படத்தில் அதிக அளவில் ஒர்க்கவுட் ஆகியுள்ளதாம். அந்த காட்சிகளுக்காக மகளிர் மத்தியில் படத்திற்கு பாராட்டுகள் குவிகிறது. ஆனால், இதற்கு எதற்கு இத்தனை கோடி வீண் செலவு என்ற பேச்சு தான் இணையம் முழுவதும் எதிரொலித்து வருகின்றன.

தப்பிக்கவில்லை

தப்பிக்கவில்லை

பைரஸி தளங்களில் விளையாட்டு படம் சிக்காது என அந்த அக்கா பேட்டி எல்லாம் கொடுத்தார். ஆனால், முதல் நாளே அந்த விளையாட்டு படம் இணையத்தில் கசிந்து விட்டதாம். எப்படி கேட் போட்டாலும், அந்த பைரஸி முதலையிடம் இருந்து படம் தப்பிக்க வில்லையாம். இதனால், மேலும் டென்ஷனில் சமூக வலைதளங்களில் தலை காட்டாமல் தலைமறைவு ஆகியுள்ளாராம் அக்கா.

ரெக்வஸ்ட்

ரெக்வஸ்ட்

அபூர்வ சகோதரர்கள் காப்பி படம் எடுத்த அளவுக்கு கூட இந்த விளையாட்டு படம் விமர்சகர்களிடையே நல்ல பெயர் எடுக்காத நிலையில், அண்ணனின் விழுதுகளான தம்பிகள், இனிமே அந்த மூன்று எழுத்து இயக்குநருடன் படம் பண்ண வேண்டாம் என நேரடியாகவே அவரிடம் ரெக்வஸ்ட் வைத்துள்ளனராம்.

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

விளையாட்டு படத்துக்கு போட்டியாக வெளியான அந்த ஒருநாள் கூத்து படம் அனைவரது பாராட்டுக்களை தட்டிச் சென்றுள்ளதால், அந்த இயக்குநருடன் அடுத்து அண்ணன் இணையும் படம் நிச்சயம் விமர்சகர்களின் வாயை அடைக்கும் என தம்பிகள் எண்ணி உள்ளனர். அதனால், அடுத்த படத்திற்கான அலப்பறைகளை ஆரம்பிக்கும் திட்டத்தில் இப்போதே இறங்க தயாராகி விட்டனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X