அந்த படத்துக்காக ஓவரா குண்டாகாதீங்க.. அப்புறம் அவங்களுக்கு வந்த நிலைமை தான்.. எச்சரிக்கும் பிரபலம்!
சென்னை: பிரபல தலைவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வரும் அந்த விருது நடிகை ஓவரா குண்டாகி வருகிறாராம்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இப்படியே வெயிட் போட்டு போனால், பின்னர் அந்த நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை தான் உங்களுக்கும் என சமீபத்தில் அவரை சந்தித்த பிரபலம் அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.

பொம்மை படம்
பயோபிக் படங்கள் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்து விடும். அதுவும் அனைவருக்கும் தெரிந்த பிரபல தலைவரின் பயோபிக் என்றால், இன்னமும் ஒரு படி ஜாஸ்தி எதிர்பார்ப்பு கூடி நிற்கும். இந்நிலையில், சமீபத்தில் படக்குழு வெளியிட்ட டீசர் பொம்மை படம் பார்த்தது போல இருந்ததாக கலாய்த்து தள்ளினர்.

பயங்கர ரிஸ்க்
இந்நிலையில், அந்த தலைவர் போல மாற தனது உடலை மாத்திரை மற்றும் ஊசி போட்டு பயங்கர ரிஸ்க் எடுத்து குண்டாகி வருகிறார் அந்த விருது நடிகை. சமீபத்தில் வெளியாகி உள்ள புகைப்படங்களில் அவரது ஓவர் குண்டான உடம்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதெல்லாம் வேண்டாம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் சமீபத்தில் விருது நடிகை சந்தித்த பிரபலம், எதுக்கு தேவையில்லாம இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க, இதெல்லாம் வேண்டாம். அப்புறம் அந்த நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை தான் உங்களுக்கும் நேரும் என்றும், உடம்பை பத்திரமாக பார்த்துக்கோங்க இல்லைன்னா, இப்போ இருக்கிற கொஞ்சம் நஞ்ச மார்க்கெட்டும் காலி ஆகிவிடும் என எச்சரித்துள்ளாராம்.

ஓட வில்லை
மேலும், அந்த விருது நடிகை நடிப்பில் அண்மையில் வெளியான அந்த படம் அங்கேயே படு தோல்வியை சந்தித்துள்ளது. அந்த இயக்குநர் இயக்கும் படங்களும் அண்மை காலமாக சொதப்பல் ஆகி வருகிற நிலையில், எதற்கு தேவையில்லாமல் உடலை வீணடித்துக் கொள்கிறோம் என்ற எண்ணம் அந்த நடிகையின் மனதிலும் தோன்றி உள்ளதாம்.

என்ன ஆகுமோ?
ஆங்கில படங்களை சுட்டு, இயக்கி பிரபலமான அந்த இயக்குநருக்கு சமீப காலமாகவே நேரம் சரியில்லை. இந்நிலையில், அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக இயக்கி வரும் அந்த பிரபல தலைவரின் பயோபிக் படம் என்ன ஆகுமோ என்ற சந்தேகம் படக்குழுவினரிடையே எழுந்துள்ளதாம். மேலும், ரசிகர்களிடையே அந்த படத்திற்கு கொஞ்சமும் எதிர்பார்ப்பு இல்லை என்ற பேச்சுக்களும் கோலிவுட்டில் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











