எல்லாம் அந்த கிளாஷ் பயம் தானாம்.. அதுக்குத்தான் இப்படி ஏகத்துக்கும் புரொமோஷன் பண்றாராம்!

சென்னை: அஞ்சாத நடிகரின் அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய அளவில் புரொமோஷன் நடக்கிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

எல்லாம் அந்த மாஸ் நடிகரின் படத்துக்கு போட்டியா ரிலீஸ் பண்றதனால தானாம்.

மாஸ் நடிகருக்கு போட்டியா, தம்பி நடிகர் களமிறங்கி ஜெயிச்ச நிலையில், இப்போ தானும், போட்டி போட தயாராகி வருகிறாராம்.

ஆனால், அதுக்கு பெரிய லெவலில் புரொமோஷன் செய்தால், தான் முடியும் என்ற ஐடியாவ கேட்டுத்தான் இப்படி காசை வாரி கொட்டுறாங்களாம்.

எகிறிய பட்ஜெட்

எகிறிய பட்ஜெட்

ஆகாசத்துல பறக்க நினைச்சுட்டா, லோ பட்ஜெட்டுலையா படத்தை பண்ண முடியும். கீழ் இருந்து போட்ட பட்ஜெட்டுலாம், மேல பறக்க பறக்க காணாம போயி, வேற ஒரு பெரிய பில்ல தயாரிப்பு தரப்பு தலையில வச்சிடுச்சு. அந்த நடிகரே தயாரிப்பு செலவையும் பார்த்துக்குறதால, மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தவிச்சுட்டு இருக்கிறாராம்.

ஜெயிக்கணும்

ஜெயிக்கணும்

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அந்த அஞ்சாத நடிகர், இந்த வாட்டி எப்படியாவது ஜெயிக்கணும், மிஸ்ஸே ஆகக் கூடாது என பலமான கூட்டணியை அமைத்துள்ளார். அந்த தைரியத்துல, மாஸ் நடிகர் கூட மோதவும் துணிந்திருக்காராம். ஆனால், எப்படியும் ஜெயிச்சுடணும் என்ற எண்ணம் தான் அவருக்கு இப்போ முழுமையா இருக்காம்.

லேசா பயம்

லேசா பயம்

ஆனாலும், தம்பி நடிகர் படத்தையே சூப்பர் ஹிட்டா கொடுத்த அந்த இயக்குநர் மாஸ் நடிகரை இயக்குவதால, தன்னுடைய படத்தின் மேல நம்பிக்கை இருந்தாலும், இந்த பிக் கிளாஷை நினைத்து கொஞ்சம் பயமும் இருக்குதாம். அதனால், தான் இப்படி ஏகத்துக்கும் செலவு செஞ்சு பெரிய அளவுல புரொமோஷன் பண்ணிட்டு வரராம்.

ஒர்க்கவுட் ஆகலை

ஒர்க்கவுட் ஆகலை

ஆனால், இதுக்கு முன்னாடி இப்படி பெரிய அளவில் புரொமோட் பண்ணி இந்த ஆண்டு துவக்கத்துல ரிலீசான அந்த உச்ச நடிகரின் படம், ஓடாமல், விநியோகஸ்தர்கள் கழுத்தில் துண்டை போடும் அளவுக்கு பஞ்சாயத்து எழுந்துள்ள நிலையில், இவரும் அதே மாதிரியான புரொமோஷனை கையாண்டுள்ளது தேவையில்லாத செலவு தான் என பேசிக்கிறாங்க..

யார் ஜெயிப்பா

யார் ஜெயிப்பா

வரும் சம்மருக்கு, பெரிய நடிகர்களின் படங்கள் வரிசை கட்டி போட்டி போட உள்ளதால், சம்மர் ஹீரோவாக யார் ஜெயிப்பார் என்ற கேள்வியும் கோலிவுட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக அந்த மாஸ் நடிகருக்கு எழுந்துள்ள ஃப்ரீ புரொமோஷனை ஈடு கட்ட இந்த அளவுக்கு பெரிய புரொமோஷனை கையில் எடுத்திருப்பது சரியான அணுகுமுறை தான் என செலவானாலும், வெற்றிக்காக சமாதானம் அடைந்து வருகிறாராம் அந்த நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X