சீரியல்களை சீக்கிரம் முடிங்க… டிவி நிறுவனம் ரகசிய உத்தரவு

By Prabhakaran

டெல்லி: அலைக்கற்றை ஊழலில் சிக்கியுள்ள டிவி நிறுவனம் விரைவில் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றால் முடக்கப்படும் ஆபத்து நிலவுகிறது.

இதனால் சீரியல்களை விரைவில் முடித்துக்கொள்ள அதன் தயாரிப்பாளர்களுக்கு ரகசிய நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2ஜி வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. கட்டுமான நிறுவனத்திடம் இருந்து கடனாக ரூ.215 கோடி பெற்ற வழக்கில் டிவி நிறுவனம் மீது மத்திய அமலாக்க பிரிவின் பிடி இறுகியுள்ளது.

இதனால் டிவி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முறைகேடான பணப்பரிமாற்றம் தொடர்பாக ஒரு நிறுவனத்தின் மீது மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் முதல் வேலையாக அந்த நிறுவனத்தின் சொத்துக்களையும், செயல்பாட்டையும் முடக்கிவைக்குமாம். எனவே 2ஜி வழக்கில் சிக்கியுள்ள டிவி நிறுவனமும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த மாத இறுதிக்குள் சீரியல்களை முடித்துக் கொள்ளும்படி டிவி நிறுவனம் சார்பில் கிராமத்து இயக்குநர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களுக்கு ரகசிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் டிவி நிறுவன நிர்வாகிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் டிவி நிறுவனம் இந்த நோட்டீசை அனுப்பி சீரியல் தயாரிப்பாளர்களை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X