Don't Miss!
- Sports
அஸ்வின் ஆஸி. மண்டைக்குள்ள போய்ட்டாரு.. பங்கமாக கலாய்த்த வசீம் ஜாபர்.. பேட்ஸ்மேன்களுக்கு யோசனை
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடக் கொடுமையே.. 'அந்த ஹீரோ பக்கத்துல நான்தான் உட்காருவேன்..' மோதிக் கொண்ட ஹீரோயின்ஸ்!
சென்னை: அந்த ஹீரோவின் அருகில் உட்கார்வதற்கு இரண்டு ஹீரோயின்களுக்கு இடையில் நடந்த போட்டி பஞ்சாயத்து, பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது படக்குழுவுக்கு.
அந்த ஹீரோ, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவின் பக்கம் கவனம் செலுத்தி இருக்கிறார்.
2020ஆம் ஆண்டு அரங்கேறிய முக்கிய நிகழ்வுகள்.. பட்டியலிடும் பிகே.. பார்ட் 2!
அவர் திடீரென கவனத்தை இங்கு திருப்பி இருப்பது ரசிகர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆச்சரியமாக
இதை அவர் அம்மா, அப்பாவே ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள். திடீரென்று ஆன்மீக பயணத்திலும் இறங்கி விடுகிறார் ஹீரோ. அவர், தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தின் ஷூட்டிங் கொரோனாவால் தடைபட்டது. பிறகு தொடங்கி நடந்து வந்தது.

அவசரம் அவசரமாக
இப்போது மழை காரணமாக நின்றிருக்கிறது, ஷூட்டிங். இதற்கிடையே சின்ன கேப்பில் ஒரு படத்தை அவசரம் அவசரமாக முடித்திருக்கிறார் ஹீரோ. படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அந்த ஹீரோவின் படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாவது இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

வட இந்திய நடிகை
இதில், வட இந்திய நடிகை ஹீரோயினாக நடித்துள்ளார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள அந்த நடிகை, தமிழில் இன்னொரு படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள்ளாகவே நடிகை, தன்னை லேடி சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைக்கிறாராம்.

போட்டி, பொறாமை
அந்த படத்தில், இவருடன் இன்னொரு ஹீரோயினும் நடித்திருக்கிறார். இதனால் யாருக்கு முக்கியத்துவம் என்பதில், போட்டி, பொறாமை ஜிவ்வென ஏறி இருக்கிறது வட இந்திய நடிகைக்கு. இன்னொரு நடிகை நடித்திருப்பது சின்ன கேரக்டரில்தான் என்றாலும் வட இந்தியாவுக்கு ஓவர் பொறாமை என்கிறார்கள்.

ஏகப்பட்ட கண்டிஷன்
இதற்கிடையேதான் அந்தப் படத்தின் பாடல் வெளியீடு நடந்தது, கடந்த வாரம். அதில், ஹீரோ பக்கத்தில் நான்தான் அமர்வேன், அந்த இடத்தில் அந்த நடிகை இருக்கக் கூடாது, அதோடு, எங்கள் இரண்டு பேரையும் ஒன்றாக மேடையில் ஏற்றக் கூடாது. அவருக்குப் பிறகுதான் என்னை மேடையில் பேசச் சொல்ல வேண்டும் என்று ஏகப்பட்ட கண்டிஷன் போட்டாராம் வட இந்தியா.

கவனிச்சுட்டு இருப்பாங்க
நடிகைக்கு இதை யார் சொல்லிக் கொடுத்தார்களோ, தெரியவில்லை. இதனால் படக்குழு கடுப்பாகி விட்டது. கொரோனா காலகட்டத்தில் நொந்து நூலாகி, இக்கட்டான சூழலில் படம் உருவாகி இருக்கிறது. இந்த நேரத்தில் இதுவேற இம்சையா என்று படக்குழுவுக்கு ஏகப்பட்ட டென்ஷனாம்.

வட இந்தியா
பிறகு நடிகையின் மானேஜர், அவர் சொன்ன மாதிரியே பாடல் வெளியீட்டின் போது, ஹீரோ பக்கத்தில் இடம் பிடித்துக் கொடுத்தாராம், வட இந்தியாவுக்கு. பிறகு இன்னொரு ஹீரோயினை பேச அழைத்துவிட்டு, வட இந்தியாவை மேடைக்கு அழைத்தார்கள். அப்போது ஹீரோ பக்கத்தில் சீட் காலியாக இருக்க, இறங்கிய இன்னொரு நடிகை, அதில் அமர்ந்து விட்டார்.

கண்ணை காண்பித்தார்
அவரை எழுந்திருக்க சொல்லுங்க என்று தனது மானேஜருக்கு வட இந்தியா கண்ணை காண்பித்தும் அவர் செய்யவில்லையாம். பிறகு ஹீரோ பேசும்வரை, மேடையிலேயே நின்றுவிட்டு இறங்கிய வட இந்தியா, மானேஜரை திட்டியதாகத் தகவல். நடித்து ஒரு படம் கூட வரவில்லை, அதற்குள் இந்த அலப்பறையா? என்கிறார்கள் கோலிவுட்டில்.