விவாகரத்தான பின்பும் எக்ஸ் புருஷனை மறக்க முடியல..அதிரடியாக முடிவு எடுத்த நடிகை!

By Staff

சென்னை: விவாகரத்தான பின்பும் எக்ஸ் புருஷனை மறக்க முடியாமல் தவித்து வந்த நடிகை தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அழகான தமிழ் பேசும் நடிகையான இவர், சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து இன்று படிப்படியாக முன்னேறி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் அக்கட தேசத்து வாரிசு நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Even after the divorce, the actress is struggling to forget her ex husband

காதல் திருமணம்: கோலாகலமாக நடந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மனம் ஒத்த தம்பதிகளாக சினிமா வட்டாரத்தில் வலம் வந்த இந்த ஜோடி மீது யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல இருவரும் பிரிந்துவிட்டனர். இருவரும் பிரிந்து விட்டதாக காற்று வழியாக வந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் ஒரே மாதிரி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

கருத்துவேறுபாடு: இணைபிரியா தம்பதிகளாக வலம் வந்த இவர் என் பிரிந்தார்கள், பிரிவுக்கான காரணம் என்ன என எதுவும் தெரியாமல் செய்தி ஊடகங்கள் மற்றும் சோஷியல் மீடியாவிலும் தாறுமாறாக செய்திகள் பரவின. ஆனால், காதல் கணவரை பிரிந்த அந்த இளம் நடிகையோ கவலையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் முன்பைவிட சினிமாவில் கவனம் செலுத்தி நடிக்கத் தொடங்கி மீண்டும் திரையில் ஜொலித்து வருகிறார்.

எக்ஸ் புருஷனை மறக்க முடியல: என்னத்தான் கணவரை பிரிந்து விட்டாலும், அவர் மீதான காதலை மறக்கமுடியாமல் தவித்து வந்த அந்த நடிகை, ஆசை கணவரின் நினைவாக குத்திக்கொண்ட டாட்டூவை அழிக்காமல் இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக இந்த நடிகையின் பெயர் வேறு ஓரு நடிகருடன் அடிபட்டு வருகிறது. இருவரும் காதலித்து வருவதாகவும், பல ஊர்களில் சுற்றித்திரியும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள்வதாக வதந்தி பரவி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், இதுநாள் வரை முன்னாள் கணவனின் டாட்டூவை தற்போது அழித்துள்ளார். எது எப்படியோ ரசிகர்களை மகிழ்விக்கும் அந்த அழகு நடிகை மகிழ்ச்சியாக இருந்தால் சரி என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X