மனைவி ஆசைக்கு பல கோடி வீண் ஆனதுதான் மிச்சம்.. அந்த நடிகர் வேண்டாம்னு அப்பவே சொல்லியும் கேட்கலையாம்?
சென்னை: பெயரை மாற்றினாலும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் மனைவியை பிரிந்த அந்த நடிகரை வைத்து இனிமேல் எல்லாம் காதல் படங்களை எடுப்பது எடுபடாத செயல் என மனைவிக்கு எக்ஸ் நடிகர் அட்வைஸ் செய்தும் கேட்காமல் தனது விஷயத்தில் தலையிட வேண்டாம் என தடுத்து எடுத்த படம் கடைசியில் தோல்வியை தழுவ அந்த ஃபேவரைட் சீனை மீண்டும் ரீக்ரியேட் செய்து மனைவியை மரண கலாய் கலாய்த்து விட்டாராம் அந்த எக்ஸ் நடிகர்.
தமிழ் சினிமாவில் ஒரு சில பெண் இயக்குநர்கள் சிறப்பான படங்களை கொடுத்து வரும் நிலையில், ஒரு சில மனைவிமார்கள் நாங்களும் சும்மா இருக்கமாட்டோம் என படம் இயக்க ஆரம்பித்து தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கண்டமேனிக்கு படம் எடுத்து ரசிகர்களையும் தயாரிப்பாளர்களையும் கதற விட்டு வருவது தான் மிச்சம் என்கின்றனர்.

அதுவும் போதா குறைக்கு பெண் இயக்குநர்கள் என்றாலே தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்து கதையை கூட கேட்காமல் அந்த இசை பிரபலம் சிக்கி சின்னாபின்னமாகி வருவது தான் காலக்கொடுமை என்றும் கலாய்த்து வருகின்றனர்.
பேஸ்மெண்ட் வீக்: துணைக்கு சில நடிகர்கள் இருந்தால் இந்த நடிகரின் நடிப்பை எல்லாம் சகித்துக் கொண்டு பார்த்து ஒரு சில படங்களை ரசிகர்கள் ஹிட்டடித்து விட்ட நிலையில், நானும் நடிகன் தான் என இன்னமும் அந்த பேஸ்மெண்ட் வீக்கான நடிகர் பல தோல்விகளை பார்த்த பின்னரும் தொடர்ந்து நடித்தே தீருவேன் என தயாரிப்பாளர்கள் பணத்தை வீணடித்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகளை கோலிவுட்டில் சிலர் முகத்துக்கு நேராகவே சொன்ன நிலையிலும், இதை விட்டால் எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றே வெளிப்படையாக நடிகர் பேசி வருகிறாராம்.
மனைவியை கலாய்த்த கணவர்: அந்த பிரபலம் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை பலமுறை அவரது நடிப்பை கிண்டலடித்து வந்த நிலையில், தற்போது மனைவியின் படம் சொதப்பிய நிலையில், இது என்னோட டர்ன் என அந்த எக்ஸ் நடிகர் மனைவியை மரண கலாய் கலாய்த்துவிட்டாராம். இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு கணவர் செயல் காரணமாக ஷூட்டிங் பக்கமே மனைவி போக மாட்டார் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே பல முறை அப்படி நடந்து தான் எப்போதாவது தனக்கு தோன்றினால் படம் எடுக்க செல்வாராம் அந்த பிரபலம் என்கின்றனர்.
செம அப்செட்: இந்த முறை எப்படியும் மிஸ் ஆகாது என்றும் புதுவிதமான கதையை யாரும் கணிக்க முடியாத அளவுக்கு படமாக்கப் போகிறேன் என கடினமாக உழைத்த உழைப்பெல்லாம் நடிகரின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு காரணமாக படம் தோற்க காரணமாகி விட்டதே என எக்ஸ் நடிகரின் மனைவி ரொம்பவே அப்செட்டாகி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











