மாஜி மனைவியே பெஸ்ட்.. செகண்ட் சேனலால் சங்கடத்தில் வாரிசு நடிகர்.. பேராசை பெருநஷ்டம்!

By Staff

சென்னை: குடும்ப ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்த நடிகர் ஒருவர், தற்போது எடுக்கும் முடிவுகளால் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். திருமணமான நிலையிலும், ஒரு பிரபலத்துடன் ஏற்பட்ட நெருக்கம் அவரது குடும்ப, திரையுலக வாழ்க்கையில் பின்னடைவுகளை ஏற்படுத்தியது. இதனால் அவர் மனைவியையும் பிரிந்து விட்டார்.

தன் பிரிவுக்கு மாமியார் தொந்தரவு, மனைவி பிரச்சினைகளைக் காரணம் கூறிய நடிகர், அவரது மனைவி போராடிப் பார்த்தபின் விலகிவிட்டார். அதன் பின்னர், அவர் நெருங்கிய தோழியுடன் சுற்றுலா சென்றுவிட்டார். தனது பட விளம்பர நிகழ்வுகளையும் தவிர்த்து, சுமார் சில மாதங்களாக சினிமாவில் இருந்தே அவர் விலகி இருந்தார்.

Ex-Wife Was the Best Star Heir in Trouble After Second Marriage Greed Leads to Big Loss

விவாகரத்து அறிவிப்புக்குப் பின், அவரது படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஒப்பந்தமான ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு தோழியுடன் சென்ற நடிகர், அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் தோழி மனவருத்தமடைந்ததும், அவர் அனுமதிக்கும்வரை அப்படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என சபதம் செய்துள்ளார்.

மாஜி மனைவியே பெட்டர்: இதன் தொடர்ச்சியாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் அழைப்புகளை நடிகர் புறக்கணித்தார். மேலாளர் இதுகுறித்து ஆலோசிக்க முயன்றபோது, அவரையும் பணியிலிருந்து நீக்கினார். ரகசிய தோழியை திருமணமும் செய்துக் கொண்டு 'செகண்ட் சேனல் சொல்லே மந்திரம்' என வாழ்ந்த நிலையில், மனைவியை பிரிந்த நடிகர் தற்போது செகண்ட் சேனலின் தொல்லை தாங்க முடியாமல் திணறி வருகிறாராம். மாஜி மனைவியே பெட்டர் என்கிற எண்ணம் தற்போது தான் அவரது புத்திக்கு உரைத்துள்ளதாம்.

கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்: காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற நிலையில் இளமை இருக்கும் போதே 2வதாக ஒருவரை தேடிச் சென்றது தனது தவறு தான் என இப்போது வருந்தி ஒன்றும் ஆகப் போவதில்லை என அந்த பக்கத்து ஸ்டேட் பிரபலம் ஃபீல் பண்ணி வருகிறாராம். கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்கிற ரீதியில் அவரது மனைவியும் இன்னொரு வாழ்க்கையை தேடி மூவ் ஆன் ஆன நிலையில், மனதளவில் சமீப காலமாக ரொம்பவே உடைந்து மது போதையில் மூழ்கிப் போயுள்ளார் என்றும் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் திடுக்கிட வைக்கின்றனர். நடிகரின் தந்தை தனது மகனை பழையபடி ஃபார்முக்கு கொண்டு வர போராடி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X